Saturday, October 13, 2018

எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு..!

exim க்கான பட முடிவு

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி நாட்டின் ஏற்றுமதியினை ஊக்குவித்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். நிறுவனங்களுக்குத் தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியினையும் இவ்வங்கி செய்து வருகிறது. 

தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

மேலாண்மை : மத்திய அரசு நிர்வாகம் : ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம்) 

காலிப் பணியிடம் : 20 

பணி : மேலாண்மை பயிற்சி 

கல்வித் தகுதி : எம்பிஏ, பட்டய கணக்குப் பிரிவு (CA) 

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் (அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 

ஊதியம் : ரூ.32,500 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி ரூ.600 எஸ்.சி, எஸ்.டி  ரூ.100 

விண்ணப்பிக்கும் முறை : 

https://www.eximbankindia.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 13 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 10 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here 

No comments:

Post a Comment