Saturday, September 1, 2018

கூகுள் நடத்தும் டூடுல் போட்டி

கூகுள் நடத்தும் டூடுல் போட்டி க்கான பட முடிவு

இந்தியாவில் படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், வித்தியாசமான உதவித்தொகை போட்டி ஒன்றை நடத்துகிறது!

டூடுல் 4 கூகுள்
படைப்பாற்றலும், வரைதலில் ஈடுபாடும் கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்காகக் கூகுள் நடத்தும் ஒரு ஸ்காலர்ஷிப் போட்டி தான், ‘டூடுல் 4 கூகுள்’. இப்போட்டில் வெற்றி பெறும் மாணவர்களின் டூடுல் வரைபடம் தீதீதீ.ஞ்ணிணிஞ்டூஞு.ஞிணி.டிண முதற்பக்கத்தில் ஒரு நாள் முழுக்க காட்சி படுத்தப்படுவதோடு அவர்களது உயர்படிப்பிற்கு தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.

தகுதி
இந்தியாவைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு, எதைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் தங்களது டூடுளை உருவாக்கலாம் அல்லது நேரடியாக கூகுள் பக்கத்திலும் டூடுலை வரையலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த போட்டிக்காக பிரத்யேகமாக உள்ள கூகுளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தங்களது விண்ணப்பத்தையும், படைப்பையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பீட்டு முறை
மாணவரின் கலைத் திறன், படைப்பாற்றல், தீம் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்களது படைப்பு மதிப்பிடப்படும். இவற்றின் அடிப்படையில், ‘நேஷனல் பைனலிஸ்ட்’, ‘குரூப் வின்னர்ஸ்’ மற்றும் ‘நேஷனல் வின்னர்’ என தனித்தனியே மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

பரிசு மற்றும் உதவித்தொகை
வெற்றி பெறும் மாணவரின் டூடுல், நவம்பர் 14ம் தேதி கூகுள் சர்ச் இன்ஜினின் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும். மேலும், அந்த மாணவரின் உயர் கல்விக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சமும், அவர் படிக்கும் பள்ளிக்குத் தொழில்நுட்ப தொகுப்பிற்காக 2 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அது மட்டுமின்றி சான்றிதழ், கோப்பை மற்றும் இந்தியாவில் இயங்கும் கூகுள் நிர்வாக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 6

விபரங்களுக்கு: https://doodles.google.co.in/d4g/

சென்னை பல்கலையில் முதுநிலை எம்.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

சென்னை பல்கலை க்கான பட முடிவு

சென்னை பல்கலைக்கழகத்தில், தனியார் கல்வி முறையின் கீழ் முதுநிலை எம்.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்
எம்.எல்., -சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம்
எம்.எல்., -குற்றவியல் சட்டம்
எம்.எல்., -அறிவுசார் சொத்து சட்டம்
எம்.எல்., -மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சட்டம்
எம்.எல்., -தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம்

தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டப் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முறை
மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை நேரடியாக பல்கலைக்கழத்திற்கு சென்று பெறலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அஞ்சல் வழியாகப் பல்கலைக்கழக வளாக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 15

விபரங்களுக்கு: www.unom.ac.in

செப்டம்பர்/அக்டோபர் 2018 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு TIME TABLE

SSLC EXAMINATION க்கான பட முடிவு

SSLC EXAMINATION SEP/OCT 2018 | TIME TABLE DOWNLOAD | செப்டம்பர்/அக்டோபர் 2018 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres-க்கு சென்று 05.09.2018 (திங்கட்கிழமை) முதல் 10.09.2018 (சனிக்கிழமை) மாலை 05.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 மாதிரி வினா - விடை








TET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை




TNPSC Recruitment 2018 13 Statistical Inspector Posts

Tamil Nadu Public Service Commission க்கான பட முடிவு

Organization Name:
Tamil Nadu Public Service Commission
Official Website:
www.tnpsc.gov.in
Job Location
Tamilnadu
Job Category
Tamilnadu
No. of Posts
13 Vacancies
Name of the Posts
Statistical Inspector & Other Posts
Qualification
Degree in Statistics or Mathematics
Selection Procedure
Written Exam, Interview
Apply Mode
Online
Starting Date
28.08.2018
Last Date
26.09.2018
Date of Examination
24.11.2018 FN & AN


TNPSC Online Application & Official Notification Links:

Website Page: Click Here
Notification: Click Here to Download
Application: Click Here to Apply

நெட் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்

நெட் தகுதி தேர்வு க்கான பட முடிவு

சென்னை, கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான, &'நெட்&' தகுதி தேர்வுக்கு, இன்று விண்ணப்ப பதிவு துவங்குகிறது.முதுநிலை பட்டம் முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவின் அங்கீகாரம் பெற்ற, &'நெட்&' அல்லது மாநில அரசின், &'செட்&' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த மாநிலத்திற்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் மட்டும் பணியாற்றலாம்.நடப்பு கல்வி ஆண்டுக்கான நெட் தேர்வு, நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

தேர்வு முடிவு, ஜன., 10ல் வெளியிடப்படுகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவருக்கான கல்வி உதவி தொகை பெறுவதற்கும், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.கணினி வழியில் நடக்கும் இந்த தேர்வுக்கு, இரண்டு தாள்களில் வினாத்தாள் வழங்கப்படும். முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 50 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்படும். இரண்டாம் தாளில், 200 மதிப்பெண்களுக்கு, 100 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, இரண்டு மணி நேரம் அவகாசம் தரப்படும். தேர்வு விபரங்களை www.ntanet.nic.in முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பு உடனே விண்ணப்பிக்கவும்!


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இமையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)

காலியிடங்கள்: 202

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: பல்கலைக்கழக மாணிய குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600

தேர்வுக் கட்டணம்: ரூ.500. பொதுப்பிரிவு மற்றும் துறைத் தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.1000 செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி மூலம் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்கூறு தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbonline.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

புதுச்சேரி அரசில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு உடனே விண்ணப்பிக்கவும்



புதுச்சேரி அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Police Constable

காலியிடங்கள்: 390

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பிளஸ் டூ பாடங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.

தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:22.09.2018

விவரங்கள் அறிய www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு தொழிற் முன்னேற்ற கழகத்தில் உதவி பொறியாளர் வேலை


சிப்காட் என அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் முன்னேற்ற கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 11

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பதவி: Assistant Engineer (Electrical)

காலியிடங்கள்: 01



தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200

வயதுவரம்பு: 01.09.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2018

விவரங்கள் அறிய www.sipcot.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.