Saturday, August 10, 2019

தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை


தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Sport Persons (Groups-C)

காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 

01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் Secunderabad-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட Bank Draft , IPO ஆக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.scr.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்திற்கான டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Senior Personnel Officer (Engg. & Rectt),
Room No.412, Office of the Principal Chief Personnel Officer, 
4th Floor, Rail Nilayam, 
Secunderabad - 500 025 (Telangana).

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.08.2019

விவரங்கள் அறிய Click Here

வருமான வரித் துறையில் வேலை விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!




வருமான வரித் துறையில் காலியாக உள்ள 20 வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும், திறமையான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Tax Assistant - 02 

தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றிருப்பதுடன் 
ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 

09.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 18

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 

09.09.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டுத் தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

பேராசிரியர் வேலை அழைக்கிறது தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி க்கான பட முடிவு

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள 179 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Professor 

காலியிடங்கள்: 179

தகுதி: 

சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 

40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar,
2nd Floor, Head Office, 
NIFT Campus, Hauz khas, 
Near Gulmohar Park, 
New Delhi - 110016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2019

விவரங்கள் அறிய Click Here

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை க்கான பட முடிவு

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

நிகழாண்டில் (2019-2020) தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மாணவ, மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம். 

ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 

இணைய தளத்தில் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்வது அவசியம். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது.

மாணவ, மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை, சான்று, ஆவணங்களுடன் பரிசீலித்து, தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு க்கான பட முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாளை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.