Thursday, February 7, 2019

தமிழக சுகாதாரத்துறையில் வேலை

செவிலியர் க்கான பட முடிவு

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி: செவிலியர் (Nurse) 

காலியிடங்கள்: 520

தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019

விவரங்கள் அறிய Click Here

பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை


பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் நிறுனத்தின் சென்னையில் காலியாக உள்ள 80 பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 80

பணி: Engineer (FTA-Civil) - 21
சம்பளம்: மாதம் ரூ.62,100

பணி: Supervisor (FTA-Civil) - 59
சம்பளம்: மாதம் ரூ.34,680

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிபளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bhelpssr.co.in or https://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Addl.General Manager(HR) BHEL, 
Power Sector Southern Region, 
690, EVR Periyar Building, 
Anna Salai, Chennai-600035.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019

விவரங்கள் அறிய Click Here

புதிய பாடத் திட்டத்தின் கீழ் நெட்' தேர்வு': தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

தேசிய தகுதித் தேர்வு (நெட் க்கான பட முடிவு

தேசிய தகுதித் தேர்வு (நெட்) புதிய பாடத் திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் -நெட்- தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வில், வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. இப்போது வெளியிட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம்: இந்தத் தேர்வானது புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும். புதிய பாடத் திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு எப்போது? இந்தத் தேர்வானது ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28-ஆம் தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. 

தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி

தொடர்புடைய படம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்ப நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும்.
 
இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும். 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்தவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.