Friday, June 28, 2019

Systech Solutions Off Campus 2019 @ KIOT Salem on 8th July 2019

தொடர்புடைய படம்

Company Name: Systech Solutions Pvt. Ltd

Post Name: Data Analyst Trainee Posts

Skills required: Managerial Skills, Leadership Skills and Strong Communication

Qualification: 
- B.E / B.TECH (CSE & IT) / M.E /M.TECH (CSE/IT)/MCA, MSC-IT, MBA
- 60% in 10th, 12th,UG & PG
- No standing arrears

Experience: (Only for 2018 & 2019 Passed out Batches)

Selection Process: 
Round 1: Aptitude Test and RDBMS
Round 2: RDBMS, Java or DotNet and Communication
Round 3: Technical Round (Will be at Systech Office)
Round 4: HR Round (Will be at Systech Office)

Walk in Location: Salem

Last Date for Registration: 06.07.2019

Walk in Date: 08.07.2019 & 8.30am

College Address and Venue:
Knowledge Institute of Technology,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.

Registration Link: Click Here

Procedure For Participation In the Recruitment Drive:
1. No Registration fee.
2. Eligible candidates are requested to register in our website www.kiot.ac.in on or before 06.07.2019.
3. The shortlisted candidates will be intimated through E-mail on 07.07.2019.
4. The candidates are instructed to bring their 2 copies of Resume, 4 copies of passport size photograph and photocopies of Mark sheets while attending the interview process.
5. The Candidates should be present at KIOT campus on 08.07.2019 at 8.30 am

விமான நிறுவனத்தில் பைலட் பணி

தொடர்புடைய படம்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பைலட் மற்றும் கோ-பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 132 

பணி: Pilots and Co-Pilots 

வயதுவரம்பு: 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பிளஸ் டூ முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of Executive Director-Operations,
Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg.
New Delhi-110003 (Near Jor Bagh Metro Station)

Advertisment → Click Here

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

இந்திய விமானப்படை க்கான பட முடிவு

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயது: 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்க்கவும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

விவரங்கள் அறிய Click Here

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!



தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 64

பணி: Junior Scientific Officer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Chemistry - 40
2. Biology - 14
3. Physics - 06
4. Physics and Chemistry (Division:Computer Forensic Science) - 04

வயதுவரம்பு: 01.07.2019 அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: தடய அறிவிய்ல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஒரு முறை பதிவிக் கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2019

விவரங்கள் அறிய Click Here

கணினி பயிற்றுநர் தேர்வு: விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

TRB க்கான பட முடிவு

கணினி பயிற்றுநர் தேர்வு எழுதியவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

இதற்காக கணினி வழித் தேர்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதியவர்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தங்களது user id மற்றும் password-ஐ பயன்படுத்தி www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் விண்ணப்ப விநியோகம்

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் க்கான பட முடிவு

இயற்கை மருத்துவம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.

அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. 

இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. அவற்றில் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

ஜூலை 19-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாரம்பரிய மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்ணா பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 ஏப்ரல்-மே மாதத் தேர்வுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீடு தேர்வு முடிவுகளை www.aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். தொலைநிலைக் கல்வி தேர்வு கால அட்டவணை, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியின் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை ஆகியவையும் இணையதளத்தில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.