Friday, February 22, 2019

Tamilnadu Police SBCID Recruitment 2019 37 Junior Reporter Posts

Tamilnadu Police க்கான பட முடிவு

Organization Name: 
Tamilnadu Police Shorthand Bureau, SBCID

Job Category: 
Tamilnadu Govt Jobs

Total No of Vacancies:
37

Job Location: 
Tamilnadu

Name of Post
Junior Reporter 

Qualification 
+2 

Selection Procedure:
Skill Test 
Oral Test

Last date for Submission of Application 
21.03.2019

Notification & Application Form 


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலை


தமிழக அரசின் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 12 

பணி: Office Assistants

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4வது தளம், பனகல் மாளிகை, 
சைதாப்பேட்டை, சென்னை - 15

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2019

விவரங்கள் அறிய Click Here

ஆவின் நிறுவனத்தில் வேலை!


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Mamager (Engg)

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. இதனை "The General Manager, K.T.D.C.M.P.U. Ltd", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager, 
K.T.D.C.M.P. Union Limited, 
55, Guruvappa Street, Ayanavaram, 
Chennai - 600023.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2019

விவரங்கள் அறிய Click Here

பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு

பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு க்கான பட முடிவு

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வெழுத சேவை மையங்களின் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மார்ச் 2019 பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எம்.ஃபில். தேர்வு முடிவு இன்று வெளியீடு

எம்.ஃபில். தேர்வு முடிவு க்கான பட முடிவு

சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (பிப். 21) வெளியிடப்பட உள்ளன. 

2018 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

அதுபோல, 2019 ஆகஸ்ட் மாத எம்.ஃபில். தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாளாகும். விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.