Saturday, August 17, 2019

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை


தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 96

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்

பயிற்சி: Apprentices

துறைவாரியான காலியிடங்கள்: 
I. Graduate Apprentices - 34
1. Mechanical Engineering - 21 
2. Automobile Engineering - 13 

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

II. Technician (Diploma) Apprentices - 34
1. Mechanical Engineering - 21 
2. Automobile Engineering - 13 
3. Civil Engineering - 04 
4. Electrical and Electronics Engineering - 04 

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019

விவரங்கள் அறிய  Click Here

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 130 +108 = 238

வயதுவரம்பு: 

01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி: 

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. கட்டணத்தை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகலில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.

 விவரங்கள் அறிய 
http://www.kpmdrb.in/doc_pdf/Notification_1.pdf


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை



ஆந்திர வங்கியில் நிரப்பப்பட உள்ள துணை ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Sub Staff

காலியிடங்கள்: 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 3 முதல் 9 ஆண்டு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2019

விவரங்கள் அறிய Click Here