Thursday, May 10, 2018

திரைப்படக் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்


திரைப்படக் கல்லூரியில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆறு வகையான பட்டப் படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை ஒளிப்பதிவு, இளங்கலை எண்மிய இடைநிலை, இளங்கலை ஒலிப்பதிவு, இளங்கலை இயக்குதல் மற்றும் திரைக்கதை, இளங்கலை படத்தொகுப்பு, இளங்கலை அனிமேஷன் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கல்லூரியில் வியாழக்கிழமை (மே 10) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

விண்ணப்பங்களை www.tn.gov.in  ஆகிய இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பம் → Click Here

TNPSC Combined Engineering Services Examination Hall Ticket Published



Hall Ticket Download → Click Here


ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளில் 330 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 20 -ஆம் தேதி, சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வினை எழுத 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விவரங்ளைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net , www.tnpscexams.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application No..) அல்லது பயனாளர் குறியீடு (Login ID) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை அளித்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். 

நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தனது அறிவிப்பில் சுதன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்பு நாளை தொடக்கம்


சென்னை அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில் சனி (மே 12) , ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13) ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன

இதுகுறித்து கல்வி மைய இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்ட செய்தி:

சென்னை அண்ணா நகரில் கடந்த 2012 முதல் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சி மூலம் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இலவச மாதிரி வகுப்புகள் தொடக்கம்: 2018-19-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான புதிய வகுப்புகள் மே 18, ஜூன் 3 ஆகிய தேதிகளில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக, சனிக்கிழமை ( மே 12) , ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13) ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஐஏஎஸ் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் உயர்மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் 10 பேர் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர். 

இந்த இலவச மாதிரி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடத் திட்டம், கட்டணச் சலுகை தேர்வு நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மே 20, ஜூன் 3-ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது.

தொடர்புக்கு: 044-26265326 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 96001 24042, 98400 97666 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

National Research Centre for Banana Trichy Recruitment 2018

Image result for National Research Centre for Banana Trichy Recruitment 2018

Org Name
National Research Centre for Banana
Website
http://nrcb.res.in
Location
Trichy
Category
Central Govt Jobs
No. of Posts
20
Name of the Posts
JRF, Technical Assistant
Qualification
B.Sc, M.Sc, M.Tech, Ph.D
Selection
Interview
Date of Interview
28.05.2018, 29.05.2018, 30.05.2018, 31.05.2018

Notification & Application Form : Click Here to Download

TNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


Tentative Answer Keys


 Sl.No.
Subject Name
Laboratory Assistant in Forensic Science Department in the Tamil Nadu Forensic Sciences Subordinate Service,2016-2018
(Date of Examination:06.05.2018 FN)
06.05.2018 FN
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 16th May 2018 will receive no attention.