Saturday, June 23, 2018

Indira Gandhi National Open University Admission Opening

Online Admission

மருத்துவம் சாரா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Related image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்துக் கல்லூரியின் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சி ரோட்டரி சங்கத்துடன் (கிழக்கு) இணைந்து ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியை கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

சுகாதார உதவியாளர், அறுவை சிகிச்சைக் கூடம், ரேடியாலஜி, டயாலிசிஸ் டெக்னீசியன், ஆய்வகம் என மருத்துவம் சாராத ஐந்து பட்டயப் படிப்புகள் இங்குள்ளன. பட்டயப் படிப்புகளின் காலம் ஓராண்டு ஆகும். இது தவிர ஆங்கிலம் சரளமாக பேசுதல், அடிப்படை ஆங்கிலம், கணினி மென்பொருள் ஆகியவற்றில் பகுதி நேர படிப்புகளும் உள்ளன.

ஓராண்டு படிப்புக்கான கட்டணம் ரூ.1,000. அதே போன்று பகுதி நேர படிப்புகளுக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டயப் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பகுதி நேர படிப்புக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் சேரலாம். வகுப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து தகவல் பெற 98403 93630, 044- 24988401 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மதுரை காமராஜர் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி


மதுரை காமராஜர் பல்கலையில், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் என்ற, ஓராண்டு சுய வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான, விண்ணப்பம் வினியோகம் துவங்கியுள்ளது.

இது குறித்து, மதுரை காமராஜர்பல்கலை வெளியிட்டசெய்திக்குறிப்பு:

மதுரை காமராஜர்பல்கலையின், வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுபணித்துறையானது, &'ரெப்ரிஜிரேஷன் மற்றும்ஏர்கண்டிஷனிங் & என்ற, ஓராண்டு சுயவேலைவாய்ப்பு சான்றிதழ்பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கான, விண்ணப்பம் வினியோகம், ஜூன், 20ல் துவங்கியது.சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள, பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்கள்விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்பு, 

அடுத்த மாதம் துவங்குகிறது; காலை, 10:00 முதல், பிற்பகல், 1:00 மணி வரை, வகுப்பு நடைபெறும். பயிற்சி முழுவதும், செய்முறை பயிற்சியாகவே இருக்கும்; பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, பல்கலை சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை, & இயக்குனர், வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவு பணித்துறை, மதுரை காமராஜர் பல்கலை, பாண்டியன் ஹோட்டல் எதிர்புறம், அழகர் கோவில் சாலை, மதுரை - 625002 &' என்ற, முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 0452 - 2537 838 என்ற, எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Gandhigram Rural Institute Recruitment for Part-Time Teachers Posts in Dindigul

Image result for Gandhigram Rural

Org Name 
Gandhigram Rural Institute

Qualification
 PG Degree

Job Location 
Dindigul

Name of the Post
 Part-Time Teachers Job Posts

Selection Process
Interview

Interview Date
02/07/2018

Walk-in Address:
Board Room, 
Administrative Block of GRI

Official Notification 
↓ 

TNPSC GROUP-II – SERVICES 2014-2016 Final Result Published


   Final Result
 ↓