Sunday, April 7, 2019

வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு

வேளாண் படிப்புக்கு க்கான பட முடிவு

வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது.நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின் வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன.ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவ தாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, 'டீன்' கல்யாணசுந்தரம் கூறியதாவது:அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன.பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர். 

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பல்கலை தரப்பில் இது சார்ந்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

10ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

10ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு க்கான பட முடிவு

பத்தாம் வகுப்பில், ஜூன் மாத தேர்வுக்கு வரும், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பில், இந்த ஆண்டு மார்ச் பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்களுக்கு, ஜூனில் நடக்கும் சிறப்பு துணை தேர்வே இறுதி வாய்ப்பாகும்.எனவே, ஜூன் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், வரும், 8ம் தேதி முதல், ஏப்.,12 வரை, தேர்வு துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு


திருவள்ளூர், முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 

பணி அலுவலக உதவியாளர் - 48
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: கணினி இயக்குபவர் - 07
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

பணி: இரவு நேரக் காப்பாளர் - 10 
பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 13
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

பணி: ஓட்டுநர் - 02 
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000

பணி: துப்புரவுப் பணியாளர் - 05
பணி: மசால்ஜி - 15
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 5000

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10 
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 62,000

தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruvallur என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் - 637003 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2019

விவரங்கள் அறிய Click Here

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

 à®‡à®¨à¯à®¤à®¿à®°à®¾à®•à®¾à®¨à¯à®¤à®¿ அணு ஆராய்ச்சி க்கான பட முடிவு

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 130

பயிற்சி: தொழில் பழகுநர் 

துறைவாரியான காலியிடங்கள்: 
Fitter - 30 
Turner - 05
Machinist - 05
Electrician - 25
Welder (Gas & Electric) - 07
Electronic Mechanic - 10 
Instrument Mechanic - 12
Draughtsman (Mechanical) - 08
Draughtsman (Civil) - 02
Mechanic Refrigeration & Air Conditioning) - 08
Carpenter - 04
Mechanical Machine Tool Maintenance - 02
Plumber - 02
Mason/Civil Mistry - 02
Book Binder - 01
PASAA (Programming and System Administration Assistant) - 07

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 16 - 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam - 603 102

விண்ணப்பிக்கும் முறை : http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019

விவரங்கள் அறிய Click Here

மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை


பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Limited நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee(HR)

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: HR/Personnel Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவுகலில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Assistant Officer Trainee(PR)

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: UGC NET June-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.posoco.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2019 

விவரங்கள் அறிய Click Here