Saturday, March 2, 2019

வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019: UPSC வெளியீடு!

தொடர்புடைய படம்

இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019க்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination - 2019

காலியிடங்கள்: 90

வயதுபவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருபவருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology அல்லது Agriculture, Forestry போன்ற ஏதாவதொன்றைமுதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர் முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும். உத்தேசமாக டிசம்பர் 2019ல் நடத்தப்படலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

விவரங்கள் அறிய click here

யுஜிசி-நெட் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

யுஜிசி-நெட் க்கான பட முடிவு

தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்படும் யுஜிசி-நெட் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை இப்போது என்.டி.ஏ. நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு ஜூன் மாதத் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. 

தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது ஜூன் 20 முதல் 28 ஆம் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ntanet.nic.in, www.ugcnetonline.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

கேந்திரிய வித்யாலயா க்கான பட முடிவு

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யலயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற, கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்: 9-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் மார்ச் 19-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கேந்திர வித்யாலய தலைமையகத்தின் kvsonlineadmission.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

பிற வகுப்புகளுக்கு... அதேபோன்று பிளஸ் 1 தவிர, இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 2-இல், ஆன்லைன் பதிவு தொடங்கும். இந்த வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஏப். 9 மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 1 சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தேர்வு வாரிய க்கான பட முடிவு

கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.