Friday, April 27, 2018

Aavin Kancheepuram SFA, Junior Executive Recruitment 2018

Image result for Aavin Kancheepuram

Organization Name:

Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd
Website:
www.aavinmilk.com
Job Location:
Kancheepuram
Category:
Tamilnadu
No. of Posts:
16
Posts:
SFA, Junior Executive
Qualification:


8th, 12th, ITI, MBA, B.A. (Co.op) / B.Com (Co.op), Degree in Vety. Science
Selection
Written Test, Oral Test
Apply Mode:
Offline
Starting date:
18.04.2018
Last Date:
07.05.2018
Examination
June/July 2018


Official Notification & Application:

Ad No. 2973/Admin/2018:

Official Notification: Click Here

Application Form: Click Here

Ad No. 3097/Admin./2018/MPCS:

Official Notification: Click Here

Application Form: Click Here

Hinduja Global Solutions (HGS) Recruitment for Customer Service Executive: International Healthcare Semi-Voice Process Job Post

Related image

Org Name
Hinduja Global Solutions (HGS)
Qualification
12th/Graduates
Job Location
Chennai, Bangalore , Mumbai
Apply Mode
Online
Name of the Post
Customer Service Executive: International Healthcare Semi-Voice Process
Experience
Fresher 0-12 Months
Job Type
Private

Preferred Skills:

  • Process SLA.
  • Telephone etiquettes.
  • MS office.
  • Typing skills & computer skills.
  • Effective communication in English.
  • Good analytical skills.
Selection Process: Interview

Apply this job -> Click Here
Official Website -> Click Here

தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Image result for தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்


தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை

தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள், பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் உரிய அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் - 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட பி.ஏ. விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி மாலைக்குள்ளும், பிற விண்ணப்பங்கள் ஜூன் 29-ம் தேதிக்குள்ளும் கிடைக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் ரூ.200 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100 மட்டும், சாதிச்சன்று நகல் தேவை) ஆகும். விண்ணப்பத்தை அஞ்சலில் பெற, விண்ணப்ப கட்டணம், அஞ்சல் கட்டணம் ரூ.50 அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5 என்ற பெயரில் எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு 9884159410, 044 – 28440102 எண்களில் அல்லது tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

Amrita Vishwa Vidyapeetham Recruitment for Various Job Vacancies ( private job)

Image result for Amrita Vishwa Vidyapeetham covai

Org Name
Amrita Vishwa Vidyapeetham
Qualification
Any Graduate, Master Degree, Ph.D
Job Location
Coimbatore
Salary
Based on Job
Name of the Post
Various  Job Posts















Selection Procedure: Interview
Official Notification & Application form-> Click Here

நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி., மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

Related image

இந்திய அரசின் நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி., மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பிஎச்.டி., மற்றும் டிப்ளமா

தகுதி: பிஎச்.டி., படிப்பில் சேர, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில், துறை சார்ந்த முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், முதுநிலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமா படிப்பில் சேர, 12ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பிஎச்.டி., படிப்பிற்கு 21 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். டிப்ளமா படிப்பிற்கு 17 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் உள்ள ஏழு தேர்வு மையங்களில் இதற்கான நுழைவுத் தேர்வு, ஆன்லைன் வழியில் நடைபெறும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே அட்மிஷன் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 1

தேர்வு நாள்: மே 20

விபரங்களுக்கு: Click Here

தேசிய பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு

Image result for niperahm

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், தேசிய பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

படிப்புகள்: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - பிஎச்.டி.,

தகுதி: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு, துறை சார்ந்த இளநிலை பட்டமும், பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டமும் தேவை.

சேர்க்கை முறை: என்.ஐ.பி.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும். அதில் 200 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 மதிப்பெண்கள் குறைக்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடை நாள்: மே 15

தேர்வு நாள்: ஜூன் 10

விபரங்களுக்கு: Click Here

இத்தாலியில் இலவச கல்வி!

Image result for இத்தாலியில் இலவச கல்வி!

இந்திய மாணவர்கள், இத்தாலியில் கல்வி பயில, பயிற்சிகளில் ஈடுபட மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது!

’இத்தாலியின் கவர்ன்மண்ட் ஸ்காலர்ஷிப் 2018-19’

அயல்நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், வெளிநாட்டு மாணவர்களை, இத்தாலியில் உயர்கல்வி மேற்கொள்ள செய்யவும், ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கவும் அந்நாட்டு அரசாங்கம் உதவித்தொகைகளை வழங்குகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஆர்வமிக்க இந்திய மாணவர்கள், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான இந்த உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மூன்று, ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் கால அளவு கொண்ட இந்த உதவித் தொகை திட்டத்திற்கு இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதிகள்: இளநிலை பட்டத்திற்கு இணையான ‘லவ்ரியா’ பாடத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தது 12 ஆண்டுகள் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு இத்தாலியில் சேர விரும்பும் கல்வி நிறுவனத்திடம் இருந்து, மாணவர்கள் ஆராய்ச்சிக்கான ஒப்புதல் கடிதம் பெற்றிருக்க வேண்டும். இத்தாலிய மொழி மற்றும் கலாசாரம் குறித்த படிப்பில் சேர விரும்புவோர் தங்களது இத்தாலிய மொழி தேர்ச்சி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: முதுநிலை படிப்பிற்கு 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பிஎச்.டி., பட்டத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவராகவும், மேற்பார்வையுடன் கூடிய ஆராய்ச்சி திட்டத்திற்கு 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

படிப்புகள்: உயிரியல், கட்டடக்கலை, இயற்பியல், கணிதம், வேதியியல், மின் மற்றும் சுற்றுப்புற பொறியியல், நானோ டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு 6 அல்லது 9 மாதங்கள் உதவித் தொகையுடன் கூடிய கால அளவு வழங்கப்படுகிறது. இத்தாலிய மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்பிற்கு 3 மாதங்கள் கால அளவு வழங்கப்படுகிறது.

குறிப்பு: ஏற்கனவே வெளிநாடுகளில் உதவித் தொகையுடனோ அல்லது சொந்த செலவிலோ ஆறு மாதங்களுக்கு மேல் கல்வி பயின்றவர் என்றால், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

உதவித்தொகை காலம்: ஆக்டோபர் 1, 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரை.

உதவித்தொகை: இந்தத் திட்டத்தின் மூலம் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதர செலவிற்காக மாதந்தோறும் 900 யூரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக் குறைய ரூ.72,000) வழங்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடுகளும் உண்டு.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: https://studyinitaly.esteri.it

உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Image result for tnpsc

உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதிதொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 1ஏல் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 14 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.