Saturday, January 19, 2019

Indian Oil Corporation Limited Recruitment 2019 (420 Apprentice Posts)

தொடர்புடைய படம்

Organization Name
Indian Oil Corporation Limited

Job Category
Central Govt Apprentice Training 

No. of Posts
420 Vacancies

Name of the Posts
Trade Apprentice, 
Technician Apprentice & Various Posts

Qualification 
ITI .,Diploma

Job Location
Tamil Nadu & Puducherry, 
Karnataka, Kerala, 
Telangana, Andhra Pradesh

Selection Procedure 
Written Exam, Interview

Apply Mode 
Online

Official Website

Starting Date
18.01.2019

Last Date 
10.02.2019

IOCL Apprentice Official Notification & Application Link
Official Website  Page 
 Official Notification PDF 
 Online Application Form 

இந்திய ரிசர்வ் வங்கியில் பொறியாளர் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி க்கான பட முடிவு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து பொறியியல் துறையில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 24

பதவி: Junior Engineer (JE) (Civil) - 15
பதவி: Junior Engineer (JE) (Electrical) - 09

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 1 ஆண்டும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019

விவரங்கள் அறிய Click Here

ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

தொடர்புடைய படம்

பி.எஸ்சி. ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., நீட், நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப் படிப்புக்கான என்.சி.ஹெச்.எம். ஜே.இ.இ.-2019 தேர்வையும் என்டிஏ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?: 

இந்தத் தேர்வானது ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணம் செலுத்த மார்ச் 16 கடைசி நாளாகும்.

இணையதள முகவரி: 

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கும், விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் www.ntanchm.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2: பிப். 6 முதல் செய்முறை தேர்வு

பிளஸ் 1, பிளஸ் 2:  செய்முறை தேர்வு க்கான பட முடிவு

தமிழகத்தில் பிப். 6-ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மாநில பாடத் திட்டத்தில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர். அவர்களுக்கான, செய்முறைத் தேர்வு பயிற்சிகள் தொடங்கியுள்ளன. 

பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று வரும் பிப். 6-இல் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும்.

இந்தத் தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல் வினாத்தாள் தயாரித்து முறைகேடுகளின்றி நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை பல்கலை.யில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுவைப் பல்கலை.யில் பன்னாட்டு வணிகவியல் பாடத்தில் எம்.பி.ஏ. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகள் அடிப்படையிலான இந்தப் படிப்பில் பன்னாட்டு நிதி மேலாண்மை, கலாசார மேலாண்மை, மனித வளம், பன்னாட்டு அளவிலான சர்வதேச சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்படும்.

இந்தப் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்ஸி. (கணிதம், கணினி அறிவியல், புள்ளி விவரங்கள்), பி.டெக். உள்ளிட்ட இளநிலைப் பட்டங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டப் படிப்பை முடித்திருந்தாலே போதுமானது.  மாணவர்கள் பொதுச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் (கேட் -2018) பெற்ற மதிப்பெண்களுடன் இணைத்து வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதியுள்ள மாணவர்கள் வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வெளிநாடு வாழ் இந்தியவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். எனினும், இந்தத் தகுதியின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மத்திய அரசின் இந்திய கலாசார துறை, மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் தகுந்த ஆவணங்களுடன் நேரிடையாக துறைத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுவைப் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (WWW.pondiuni.edu.in) பார்த்து அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.