Sunday, October 28, 2018

ஜன. 11-இல் பல்லாவரத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 2019 ஜனவரி 11-ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது.

ராணுவத்தில் ஜூனியர் ஆணையரக அதிகாரி, ஹவில்தார் ஆகிய பணியிடங்களுக்கான ஆள்தேர்வு சென்னை பல்லாவரம் ராணுவ முகாமில் 2019 ஜனவரி 11-இல் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். இதுதவிர, ஆந்திரம், தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 17-ஆம் தேதிக்கு பிறகு, அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாக வெளியிடப்படும்.

இந்த அனுமதி அட்டையை பிரிண்ட் எடுத்து வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் உடல்திறன் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுவர் என பத்திரிகை தகவல் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை


அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: அலுவலக உதவியாளர்

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்).

வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: குரூப் டி தரத்திலானது. மாதம் ரூ.15,700 - 50,000

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சாதி, முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 600098 எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த, செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு

tnpsc க்கான பட முடிவு

சென்னை: குரூப் 4 தோ்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தோ்வு முடிவுகள் (தரவரிசைப் பட்டியல்) கடந்த ஜூலை 30-இல் வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரா்களின் விவரங்களும் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 31 ஆயிரத்து 425 விண்ணப்பதாரா்கள் கடந்த செப்டம்பா் 18 வரையிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மற்றும் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் வரும் 2-ஆம் தேதி வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வா்களின் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பதாரா்கள் சான்றிதழ்கள் தோ்வாணையத்தால் பெறப்பட்டதனால் மட்டுமே அவர்கள் இந்த தோ்வுக்கு தகுதியானவா்களாக கருதப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தரவரிசை மற்றும் இனசுழற்சியின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் விரைவில் தனியே வெளியிடப்படும். 

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 முதல் மாலை 5.45 வரை தொடா்பு கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

நவ.4-இல் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் குரூப்-2 மாதிரித் தேர்வு

குரூப்-2 க்கான பட முடிவு

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 4-இல் குரூப்-2 மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. 

இதுகுறித்து கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைவருக்கும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் நடப்பு நிகழ்வுகள் புத்தகமும், தேர்வுக்கான வழிகாட்டி கையேடும் இலவசமாக வழங்கப்படும். இந்த மாதிரித் தேர்வு முடிந்த பின் அதற்கான விடை, தெளிவான விளக்கங்களுடன் மாணவர்களுக்கு அதே நாளில் வழங்கப்படும். 

பதிவுக்கு: மாதிரித் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தங்களது பெயர், தொடர்பு எண், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் www.kingmakersacademy.com/tnpscmocktest என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வு: நவ. 4-இல் 14 மாவட்டங்களில் இலவச மாதிரித் தேர்வு

குரூப்-2 தேர்வு க்கான பட முடிவு

சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நவம்பர் 11-ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பழனி, மதுரை, திருநெல்வேலி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறஉள்ளது.

விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacade அல்லது 76677 66266, 044 43533445, 044 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு: நவ. 5 வரை விண்ணப்பிக்கலாம்


புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவ மேற்படிப்புக்கு நவ. 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள கால்நடை மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்.வி.எஸ்சி) இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பாடப் பிரிவில் மொத்தம் 29 இடங்கள் உள்ளன. இவற்றில் புதுவை மாநில மாணவர்களுக்கு 18 இடங்களும், பிற மாநில மாணவர்களுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்படும்.

தகுதியுள்ள மாணவர்கள் www.centacpuducherrry.in என்ற சென்டாக் இணையதளத்தில் நவ. 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு நவ. 15-ஆம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களை www.ragacovas.in என்ற ராஜீவ் காந்தி கல்நடை மருத்துவக் கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கெüடு தெரிவித்தார்.