Sunday, June 3, 2018

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for neet result 2018

RESULT LINK

36 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

Image result for tnmgrmu

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த 36 படிப்புகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி, பதிவாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கூறியது:

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த இளநிலை மற்றும் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. 20 இளநிலை படிப்புகள் (பி.எஸ்சி), 13 பட்டயப் படிப்புகள், 3 பல் மருத்துவப் பட்டயப் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. ரேடியோதெரபி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, உடற்கல்வி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் என மொத்தம் 36 மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. 

இவற்றில் பி.எஸ்சி படிப்புகள் நான்கு ஆண்டுகளும், பட்டயப்படிப்புகள்(டிப்ளமோ) இரண்டரை ஆண்டுகளும் நடைபெறும். தமிழகத்தில் 500 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பங்களிப்புடன் இந்தப் படிப்புகள் நடைபெறுகின்றன. கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையாகும். இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் கடந்த ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேலான இடங்கள் காலியாக இருந்தன. இந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகம் இருப்பதால் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர முன்வர வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்குப் பிறகு இந்தப் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஐ.டி.ஐ.யில் இலவசப் பயிற்சி: ஜூன் 27-க்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Image result for தொழிற்பயிற்சி

அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான இலவசப் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

மகளிர் பயன்பெறும் வகையில் அரசினர் அம்பத்தூர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) சார்பில் வேலைவாய்ப்புக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கென தனியே நடைபெறும் இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மேலும், இங்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைப்படக் கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை, சலுகை விலையில் ரயில் பயண அட்டை மற்றும் மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சேருவதற்கு வயது வரம்பு எதுவும், கிடையாது. 

இப்பயிற்சி நிலையத்தில் குறிப்பிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளான கம்மியர் கருவிகள், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், செயலகப் பயிற்சி, கட்டடப்பட வரைவாளர், தையல் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் ஓராண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட இருக்கின்றன. இதில் சேர விரும்பும் மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்று பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்

HOW TO USE NEW SCHOOL BOOK QR(QUICK RESPONSE) CODE

Image result for NEW SCHOOL BOOK qr

QR CODE - QUICK RESPONSE CODE (விரைவு குறீயிடு )

தமிழ்நாடு வெளிட்டு உள்ள புதிய பாட புத்தகத்தில் QR CODE எனப்படும் விரைவு குறீயிடு உள்ளது .அதை பற்றி பார்ப்போம்

(FOR EXAMPLE WE TAKE 6TH STANDARD NEW TAMIL BOOK)

பாட புத்தகத்தின் பொருள் அடக்கத்தில் 3 QR CODE இருக்கும் 

1. முதல் QR CODE ஸ்கேன் செய்தால் இந்த நூலின் E BOOK FORMAT கிடைக்கும்



2.இரண்டாவது QR CODE மதீப்பீடு (assesment ) அதாவது அனைத்து பாடத்தில் உள்ள மதீப்பீடு பகுதி தொகுப்பாக கிடைக்கும்.


3.மூன்றாவது QR CODE அனைத்து பாடத்தில் உள்ள வலை தளங்கள் தொகுப்பாகும் 



முதலில் பாட பகுதியில் உள்ள QR CODE பயன்படுத்துவது பார்ப்போம் 

1.பாட பகுதியில் உள்ள QR CODE SCAN செய்து பார்த்தால் அந்த பாட பகுதி வீடியோ (video format )இருக்கும் .

2.இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடத்தினை எளீத்தில் புரிந்து கொள்ள முடியும் .



மதீப்பீடு பகுதியில் உள்ள QR CODE பயன்படுத்துவது:

1.மதீப்பீடு பகுதி QR CODE SCAN செய்து பார்த்தால் அந்தபகுதியில் உள்ள அணைத்து கேள்வி களும் online முறையில் பயிர்ச்சி செய்து பார்க்கும் முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது .

எப்படி SCAN செய்து பார்ப்பது:

1.இதற்கு என்று பிரத்தியோக ஆண்ட்ராய்டு செயலி (ANDROID APPLICATION ) உள்ளது .

2.செயலி பெயர் "DISKSHA APP"

APP LINK: clik here

3.APP INSTALL செய்து உள்ளே சென்று வலது புறத்தின் மேல் பக்கத்தில் உள்ள QR CODE பட்டன் அழுத்தி SCAN செய்தால் அதை பற்றிய அனைத்து தகவல்களும் வரும் .

METHOD TWO (முறை 2) 

1.Normal QR CODE SCANNER ,CAM SCANNER போன்ற android application பயன்படுத்தியும் ஸ்கேன் செய்ய முடியும் .

QR CODE SCANNER - clik here

CAM SCANNER- clik here

சந்தேகம் இருந்தால் இந்த video பார்க்கவும் -- clik here