Saturday, June 9, 2018

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் பொறியியல், சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Image result for பொறியியல்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2018 - 19ஆம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசைப் பட்டியலில், கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய நேரம், நாள் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு www.sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

சட்டக்கல்விக்குத் தகுதி அடிப்படையில் வெளிப்படையான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2018 ஜூன் 19-ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 20,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியில் சேர்க்கைக்கு 1,600 இடங்களும், சட்டக்கல்வி சேர்க்கைக்கு 120 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாசலபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார் ஆகிய மாநில மாணவர்களுக்குச் சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும்.

மேலும், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் M.B.B.S.,- B.D.S., விண்ணப்பம் வினியோகம்

Related image

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்களை, 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 19ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். 

விண்ணப்ப படிவங்கள் பெற, செயலர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில், 500 ரூபாய்க்கான டி.டி., எடுக்க வேண்டும்.
சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.சி., - எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்.

மாணவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து, விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். 

விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வினியோகிக்கப்படும்.தட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான, டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., படிப்பு

Image result for சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., படிப்பு

சென்னை: சிறப்பு குழந்தைகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி யியல் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எட்., பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறப்பு குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியை மேற்கொள்ள, சிறப்பு, பி.எட்., ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

இந்த படிப்பை, வித்யா சாகர் என்ற தனியார்நிறுவனம் நடத்துகிறது. இந்த படிப்புக்கான அனுமதியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும், சிறப்பு, பி.எட்., படிப்பில், சிறப்பு குழந்தைகள் மற்றும் பல்வகை குறைபாடுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, பயிற்சி தரப்படுகிறது.

இது குறித்த விபரங்களுக்கு, 98400 35203 என்ற எண்ணையோ, hrd@vidyasagar.co.in என்ற, இ - மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

அசல் சான்றிதழ் காட்டாவிட்டால் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது

Image result for கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்து, அசல் சான்றிதழ்கள் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது., கவுன்சிலிங்கிலும் பங்கேற்க முடியாது' என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:
  • இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை சார்பில் அனுப்பப்படும், மொபைல்போன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில்களை, ஒவ்வொரு மாணவரும் அவ்வப்போது பார்க்க வேண்டும்
  • சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட உதவி மையத்திற்கு வர வேண்டும். வீட்டில் இருந்து புறப்படும் போதே, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள, சான்றிதழ்களை ஆய்வு செய்து எடுத்து வர வேண்டும்
  • தவிர்க்க முடியாத காரணங்களால், சான்றிதழ் சரி பார்ப்புக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாதவர்கள், அதே நாளில், ஏதாவது ஒரு நேரத்திற்குள் வந்து விட வேண்டும். 
  • அதிலும், வர முடியாதவர்கள், எந்த மாவட்டத்தினராக இருந்தாலும், வரும், 17ம் தேதி, சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்திற்கு வர வேண்டும். 
  • கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, ஒதுக்கப்பட்ட நேரத்தில் வருவது, மாணவர்களின் கவுன்சிலிங் பணியை எளிதாக்கும்
  • சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, ஆன்லைனில் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதில், புகைப்படம் ஒட்டி எடுத்து வர வேண்டும்.
  • சான்றிதழ்களின் நகல் மட்டுமின்றி, அசல் சான்றிதழையும் கட்டாயம் எடுத்து வரவேண்டும். அசல் சான்றிதழ் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது. தரவரிசையில் இடம் பெறாவிட்டால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது
  • வேறு கல்லுாரிகளில் சேர்ந்து, அங்கு சான்றிதழ்களை அளித்தவர்கள், அந்த கல்வி நிறுவன முதல்வரிடம் இருந்து, சான்றிதழ் அங்கு இருப்பதற்கான, 'போனபைட்' என்ற, அத்தாட்சி சான்றிதழ் வாங்கி வர வேண்டும். 
  • இறுதியில், கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கிய பின், சான்றிதழ்களை முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே, கல்லுாரிகளில் சேர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, tnea2018@annauniv.edu என்ற, இ - மெயில் முகவரிக்கு கடிதம் அனுப்பலாம். மேலும், 044 - 2235 9901 என்ற எண்ணில் இருந்து, இறுதியில், 20ம் வரிசை வரையில் உள்ள எண்களில், தொடர்பு கொள்ளலாம்.