Thursday, May 14, 2020

எஸ்ஆர்எம் பி.டெக். நுழைவுத் தேர்வு ஜூலை 30-ல் தொடக்கம்

Copycat' suicides in SRM Institute: What colleges, families and ...


எஸ்ஆர்எம் பொறியியல் (பி.டெக்.) நுழைவுத் தேர்வு ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காட்டாங்கொளத்தூர், ராமாபுரம், வடபழனி, டெல்லி, சோனி பேட் (ஹரியாணா), சிக்கிம், அமராவதி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (SRMJEEE) ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்தியாவில் 127 நகரங்கள் மற்றும் துபாய், தோஹா, மஸ்கட், பஹ்ரைன், குவைத் என வெளிநாடுகளில் நடக்கும் இத்தேர்வில் 1.75 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கணினி மூலமாக 2.30 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், உயிரியல், ஆப்டிடியூட் ஆகியவற்றில் இருந்து 125 கேள்விகள் (மல்டிபிள் சாய்ஸ்) கேட்கப்படும். நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. ஜூலை 3-வது வாரத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அரசு அறிவுறுத்தலின்படி முறையாக இடங்கள் தூய்மை செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்தப்படும்.எஸ்ஆர்எம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ரூ.32 கோடி உதவித் தொகை வழங்குகிறது.

இந்த ஆண்டு எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்த 8,500-க் கும் மேற்பட்டோர் அதிக சம்பளத்துடன் வேலையில் சேர்ந்துள்ளனர். மேலும் விவரங்களை www.srmist.edu.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.