Wednesday, July 11, 2018

Whatsapp Group-ல் Admins மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?



"வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?"


தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் தங்களது குறிப்பிடத்தக்க நேரத்தை குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில்தான் செலவிடுகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால், மற்ற சில செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கே சவால்விடும் வகையிலான புதுப்புது வசதிகளை பயனர்களுக்கு அளித்த வண்ணம் உள்ளன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது போட்டி செயலிகளான டெலிகிராம், ஸ்நேப்சாட், ஹைக் போன்றவை ஏற்கனவே அளித்துக்கொண்டிருக்கும் வசதிகளை தனது பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறது.

அந்த வரிசையில், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் பயனருக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயத்தில் தலைவலியாகவும் இருக்கிறது குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள். அவற்றை தடுப்பதற்கு அட்மின்கள் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இந்நிலையில், அதற்கான தீர்வை அளித்துள்ளது வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வசதி.

உதாரணத்திற்கு, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 133 பேர் உள்ளதாகவும், அதில் அட்மின்களாக உள்ள மூன்று பேர், அந்த குரூப்பில் தாங்கள் மட்டுமே தகவல்களை பகிர வேண்டுமென்று விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கனவாக இருந்த அட்மின்களின் இந்த விருப்பம் தற்போது சாத்தியமாகியுள்ளது.


இதை எப்படி செய்வது?

1. நீங்கள் அட்மினாக இருக்கும் ஏதாவதொரு குரூப்புக்குள் நுழையுங்கள்.

2. அதில் குரூப்பின் பெயரையோ அல்லது 'Group info' என்பதையோ தெரிவு செய்யவும்.

3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.

அவ்வளவுதான்! இனி உங்கள் குரூப்பில் பத்து பேரோ, நூறு பேரோ அல்லது இருநூறு பேர் இருந்தாலும், அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் தகவல்களை பதிவிடவோ அல்லது பகிரவோ முடியும்.

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, மாணவ - மாணவியர், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Image result for அரசு விளையாட்டு விடுதிகளில்

சென்னை: அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, ஆர்வமுள்ள மாணவ - மாணவியர், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்காக, நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய, முதல்நிலை விளையாட்டு மைய விடுதிகள் நடத்தப்படுகின்றன.

இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர், 2018 - -19க்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை, இன்று முதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்களை அணுகி பெறலாம். 

மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய, மாநில அளவில், வெற்றி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 18ம் தேதி காலை, 8:00 மணிக்குள், மாநில தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலை. எம்.பி.ஏ. படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Image result for அண்ணாமலைப் பல்கலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. செயலாக்கத் தொழில் நிர்வாக மேலாண்மை (பகுதி நேரம்) M.B.A. Executive Management (Part-time) படிப்புக்கு இணையதளம் (ஆன்லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், என்.எல்.சி. இந்தியா நிறுவனமும் இணைந்து எம்.பி.ஏ. செயலாக்கத் தொழில் நிர்வாக மேலாண்மைப் படிப்பை வழங்குகின்றன. இதில் சேர விரும்புவோர் www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களையும், விளக்கக் கையேடும் பெற்று, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்றவர்களுக்கு ரூ. 1,000. 

கல்வித் தகுதி : 

10+2+3 முறையில் இளநிலைப் பட்ட படிப்பு மற்றும் இரண்டு வருட அனுபவம். நிறைவு செய்யப்பட்ட இணையதள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து 30.7.2018 }க்குள் "பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் } 608 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவன வளாகத்தில் உள்ள "பிளாக் எண்: டி.142, அண்ணா சாலை, நெய்வேலி' அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் செல்வராசுவிடம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அலுவலக நேரத்தில் நேரிடையாகவும் விளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94429 95980, 90801 08099 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும், aselvarasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

அகில இந்திய எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முடிவு இன்று வெளியீடு

Image result for அகில இந்திய எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

அகில இந்திய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (இ.எஸ்.ஐ.,) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. 

முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவில் 12,683 இடங்கள் நிரம்பின. முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், கைவிடப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதற்கான முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக் கடிதத்தையும் மாணவர்கள் இதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேருவதற்கு ஜூலை 22-ஆம் தேதி கடைசியாகும். கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் ஜூலை 23 -ஆம் தேதி அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கே திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Medical Services Recruitment Board (229 Pharmacist Posts)

Image result for Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) 2018

Organization Name
Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB)

Total No. of Vacancies
 229 

Job Location
Tamilnadu

Name of the Post & No of Vacancies
1. Pharmacist (Siddha) - 148 Posts
2. Pharmacist (Ayurveda) - 38 Posts
3. Pharmacist (Homoeopathy) - 23 Posts
4. Pharmacist (Unani) - 20 Posts

Qualification
Diploma

Selection Procedure 
 Merit List, Interview

Last date for Submission of Application
 30.07.2018

Online Application & Official Notification Links
Notification PDF: Click Here
Online Application: Click Here

Note:"OC" CANDIDATES ONLY

TNPSC TOURIST OFFICER IN THE TAMIL NADU GENERAL SERVICE, Certificate Verification Results published

Image result for TNPSC

TOURIST OFFICER IN THE TN GENERAL SERVICE
Certificate Verification Result (11.07.2018)

TNPSC CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE Written Exam Results PUBLISHED

Image result for TNPSC

Written Exam Results (11.7.2018)

Capgemini off Campus 2018 in Mahendra Engg College, Namakkal

Related image

Job Fare Name 
Capgemini – Off Campus Drive

Qualification 
B.E/B.Tech

Off Campus Location
 Mahendra Engg College, Namakkal

Off Campus Date
 20/07/2018

For More Details See The Image 

Kanchipuram Nuclear Power Corporation of India limited Recruiting for Trade Apprentice Job Posts

Image result for Nuclear Power Corporation of India limited (NPCIL)

Org Name 
Nuclear Power Corporation of India limited (NPCIL)

Qualification 
10th, 12th, ITI

Job Location
 Kancheepuram

Vacancies 
32 Vacancies

Name of the Post 
Trade Apprentice 

Apply mode
 online

Last Date
 16/08/2018

download the advertisement

டி.என்.பி.எஸ்.சி. நேர்காணல் நடத்துவதற்கு புதிய முறை அறிமுகம்!

 

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் மூலம் சரியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவது வழக்கம்.

இந்த நேர்காணல்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் உள்ளிட்ட தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது வழக்கம். அதில் இரு குழுக்களாக அவர்கள் பிரிந்து செயல்படுவார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இனி ஒரு குறிப்பிட்ட நேர்காணலை நடத்தவுள்ள தேர்வாணைய குழு உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார்கள். அதிலும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் எந்தக் குழுவில் இடம்பெறுவார் என்பதும் குலுக்கல் மூலமே தேர்வு செய்யப்படுவார்.

இதன்மூலமாக நேர்காணல்களில் வெளிப்படைத்தன்மையை கைக்கொள்ள முடியும் என்று நம்புவதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.