Friday, November 16, 2018

கல்வி உதவித் தொகை புதுப்பிப்பு விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ. வரவேற்பு

தொடர்புடைய படம்

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வரவேற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உயர் கல்வி பெறுவதற்கான கல்வி உதவித் தொகையை படிப்பு க் காலம் முழுவதும் மத்திய அரசு வழங்குகிறது. 

கடந்த 2014-இல் இந்த மத்திய கல்வி உதவித் தொகையை வாங்க ஆரம்பித்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 4-ஆவது புதுப்பித்தல் விண்ணப்பத்தை சி.பி.எஸ்.இ. வரவேற்றுள்ளது. 

இந்த விண்ணப்பப் படிவம் www.cbse.nic.in என்ற இணையதளத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய டிசம்பர் 15 கடைசி நாளாகும். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமர்ப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் கார் ஓட்டுநர் வேலை


இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்றவர்களிடம் இருந்து டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Staff Car Driver

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 24.12.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Director (Recruitment), 
O/o Chief Postmaster General,
U.P.Circle, Hazratganj 
Lucknow - 226 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2018

விவரங்கள் அறிய click here