Thursday, December 29, 2022

CBSE – 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

 


Download CBSE 10&12th Date Sheet

UGC NET 2023: தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



இந்தியா முழுவதும் இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்காக உதவித்தொகை பெறுவதற்கு மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான UGC NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிசம்பர் மாத UGC NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை நேற்று முதல் UGC தொடங்கியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மூலமாக உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான சான்றிதழை பெறலாம்


இதே போல் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றலாம். இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளில் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்படும். இதையடுத்து 2ம் தாளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்துள்ள பாடம் சார்ந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படுகிறது.

இதையடுத்து தற்போது UGC-NET டிசம்பர் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29ம் தேதி முதல் 2023 ஜனவரி 17ம் தேதி அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான தேர்வானது பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

 Notification PDF

Application Link