Saturday, June 2, 2018

புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வு 28–ந் தேதி தொடங்குகிறது

Image result for சென்டாக் கலந்தாய்வு

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தொழிற்கல்வி பிரிவுகள், தொழிற்கல்வி அல்லாத பாடப்பிரிவுகள், ஓட்டல் மேலாண்மை, பட்டயப்படிப்பு, நுண்கலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பு போன்றவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் இணையதளத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வை நடத்த சென்டாக் அமைப்பிற்கென்று புதிய இணையதளம் (www.centacpuducherry.in) உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்த இணையதளத்தில் கடந்த 30–ந் தேதி முதல் கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

அடுத்த கட்டமாக எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.எஸ்சி. நர்சிங், எம்.எல்.டி., எம்.ஆர்.ஐ.டி., என்ஜினீயரிங், பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி., பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு தரவரிசை பட்டியல் 20–ந் தேதி வெளியிடப்படும். அதில் ஆட்சேபனை இருப்பின் திருத்தம் செய்ய 21–ந் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். 22–ந் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 28–ம் தேதி தொடங்கப்படும். இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை பெறும் மாணவர்கள் அடுத்த மாதம்(ஜூலை) 12–ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜூலை) 18–ந் தேதி 2–வது கட்ட கலந்தாய்வு தொடங்கப்படும். இந்த கலந்தாய்வில் சேர்ந்து இடங்களை பெற்ற மாணவர்கள் ஆகஸ்டு மாதம் 3–ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் தகவல்களை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்புகள் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்


குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் வெளியிடப்படவில்லை. ஃபாரஸ்ட் அப்ரடண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், உதவி சிஸ்டம் என்ஜினியர், உதவி சிஸ்டம் அனலிஸ்ட் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலும், அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 3-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. 

வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஜுன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்பட்டுவிடும். அதன்பிறகு இதர தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும்" என்றார்.

பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். கடந்த 2017-இல் 1,40,633 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 8-ஆம் தேதி முதல்...

விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். 

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.52 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு: 

பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 14-ஆம் தேதி வரை... 

பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.

அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

சம வாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் எப்போது? 

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்ட ஓரிரு நாள்களில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டு விடும்.

சம வாய்ப்பு எண் எதற்கு?

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.

அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்


கால்நடை மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., என்ற, கால்நடை மருத்துவம்; ஏ.ஹெச்., என்ற, கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, 820 இடங்கள் உள்ளன. 

இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், மே, 21 முதல் பதிவிறக்கம் செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 11க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 11ம் தேதி வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும், 18ம் தேதி வரையும், அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதே போல, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் வெளி நாட்டினர், ஜூலை, 6 முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.ஜூலை, 20க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.

TNPSC Civil Judge In The TN State Judicial Service Hall Ticket published

Image result for CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE

Exam Date : 09.06.2018

Hall Ticket Link

Madras High Court recruitment for Personal Assistant & Clerk Job Posts

Image result for Madras High Court

Org Name
 Madras High Court
Website
-----
Location
Tamil Nadu
Job Category
TN  Govt
No. of Posts:
81 Vacancies
Name of Posts
Personal Assistant & Clerk
Qualification
Bachelor Degree
Selection
Written Exam, Interview
Apply Mode
Via Postal
Starting Date
----
Last Date
14/06/2018
Exam
August, 2018

Notification → Click Here

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

Image result for centac puducherry

புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.