Monday, June 18, 2018

இளநிலை டிசைனிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

Image result for டிசைனிங் படிப்பு

இளநிலை டிசைனிங் படிப்பு

டில்லி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் இளநிலை டிசைனிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: 

பி.டெஸ்., (பேச்சுலர் ஆப் டிசைனிங்) - 4 ஆண்டுகள்

தகுதிகள்: 

அறிவியல், வணிகவியல், கலை மற்றும் மானுடவியல் ஆகிய பிரிவுகளில் பள்ளிப் படிப்பை சி.பி.எஸ்.இ., அல்லது மாநில பாடத்திட்டத்தில் முடித்திருக்க வேண்டும். அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டு டிப்ளமா பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ‘யு.சி.இ.இ.டி.,’ நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: 

டில்லி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். மாணவர்கள் ‘யு.சி.இ.இ.டி.,’ தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 29

விபரங்களுக்கு: Click Here

உயர்நிலை பள்ளிப் படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்

Related image

வித்யாதன் ஸ்காலர்ஷிப்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, சரோஜினி தாமோதரன் நிறுவனம், உயர்நிலை பள்ளிப் படிப்பிற்கான உதவித்தொகையை வழங்குகிறது!

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், சமுதாயத்தில் கல்வி ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தவும் வித்யதன் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயன் பெறுவர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திகும் அதிகமாக மதிப்பெண் பெற்று குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும், மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி மாணவர்கள் என்றால், பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாலே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டு உயர்நிலைப் பள்ளி படிப்பிற்கும், தலா 60,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த மாணவர்கள் உயர்நிலை படிப்பிலும் நல்ல மதிப்பெண்ணகளுடன் தேர்ச்சி பெற்றால், அவர்களது மேற்படிப்பிற்கும் தேவையான உதவித்தொகையை அறக்கட்டளை வழங்க உள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மேலும், இந்த உதவித்தொகை தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்னும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியில் பதில்களை பெறலாம் அல்லது 73396 59929 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: Click Here

நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Related image

சண்டிகரில் செயல்படும் ‘போஸ்ட் கிராட்ஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’, கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: 

பி.எஸ்சி.,- நர்சிங் (4 ஆண்டுகள்) மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங் (போஸ்ட் பேசிக் - 2 ஆண்டுகள்)

தகுதிகள்: 

4 ஆண்டு நர்சிங் படிப்பில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 2 ஆண்டு நர்சிங்(போஸ்ட் பேசிக்) படிப்பிற்கு பள்ளி படிப்புடன், ஜெனரல் நர்சிங் படிப்பில் குறைந்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

பி.எஸ்சி.,நர்சிங் - 25 வயதிற்குள் இருத்தல் அவசியம். பி.எஸ்சி.,நர்சிங் (போஸ்ட் பேசிக்) - 45 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

சேர்க்கை முறை: 

நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். ஆங்கில வழியில் 100 மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 8

தேர்வு நாள்: ஆகஸ்ட் 12

விபரங்களுக்குClick Here

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி: ஜூன் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Image result for போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வர்களுக்கான இலவச முன்தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர ஜூன் 29 -க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னைப் பல்கலைக்கழகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் முன்தேர்வுப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த உள்ளன. 

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இதில், பங்கேற்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் ஜூன் 29 -ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டும் மைய இயக்குநர் அலுவலகம் அல்லது சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Image result for மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக்' செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி

Related image

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) தமிழ் உள்பட 20 இந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இத்தேர்தவை எழுத முடியும். தமிழ் உள்பட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்படத்தப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

கடும் எதிர்ப்பு: 

மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் தொடக்கக் கல்வி, உயர் நிலைக் கல்வி ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் இத்தேர்வை எழுத வேண்டும் என்ற சிபிஎஸ்இ அறிவிப்புக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முடிவு மாற்றம்: 

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்இ-யின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஏற்கெனவே நடத்தி வந்ததுபோல 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்' என்று சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டார். இது தொடர்பான தகவலை அவர் சுட்டுரையிலும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, முன்பு நடத்தியதுபோல ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்க மொழி, காரோ (மேகாலயம், அஸ்ஸாம், திரிபுராவில் பேசப்படும் மொழி), குஜராத்தி, கன்டனம், காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிஸோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபெத்திய மொழி, உருது ஆகிய மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ சுட்டுரையில் அறிவித்துள்ளது.


TNPSC EXAM மாதிரி வினா விடை india economics

TNPSC GROUP II: மாதிரி வினா விடை

TNPSC GROUP II: மாதிரி வினா விடை

TNPSC GROUP II: மாதிரி வினா விடை


TNPSC EXAM மாதிரி வினா விடை mathes

TNPSC GROUP II: மாதிரி வினா விடை

TNPSC GROUP II: மாதிரி வினா விடை

\nantri dinamalar

ஐ.டி.ஐ முடித்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

Job Fair Name 
Tamil Nadu Special Job Fair

Eligibility 
ITI

Job Fair Location
 ↓
Chengalpattu

Job Fair Date
 22/06/2018

Job fair Venue
TAMIL NADU GOVERNMENT I.T.I, 
CHENGALPATTU, 
KANCHIPURAM DISTRICT,
KANCHIPURAM 

Details
↓ 

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Image result for வேலை வாய்ப்பு முகாம்

Job Fair Name 
Tamil Nadu Placement Drive 

Eligibility 
Diploma, Any Degree 

Job Fair Location 
Chennai 

Job Fair Date 
19/06/2018

Job fair Venue:
I Floor, 
Tamil Nadu Skill Development Corporation Integrated Employment Offices Building, 
T.V.K.Industrial Estate,
Guindy, Chennai-600 032.

Details

 https://www.ncs.gov.in/