Saturday, March 9, 2019

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தொடர்புடைய படம்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணி: Deputy General Manager

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi - 110 001

விவரங்கள் அறிய Click Here

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2019

தேசிய உர நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Engineering Assistant Grade II. (Production) 

காலியிடங்கள்: 53

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.3.2019.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலை


நாடு முழுவதும் உள்ள விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 421 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 421

பணி: Peons & Sweepers

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்த மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vijayabank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்கள் அறிய Click Here

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2019

உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடர்புடைய படம்

திருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உடற்கல்வி இயக்குநர் - 01
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: இளங்கலை பட்டபடிப்புடன்ம் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உடற்கல்வி ஆசிரியர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 8,000 
தகுதி: உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2019

தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து உடற்தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கேங்க்மேன் (பயிற்சி)

காலியிடங்கள்: 5000

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: இதர பிரிவினர், SC,ST ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.04.2019

விவரங்கள் அறிய Click Here




தமிழக காவல்துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர் வேலை


969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மார்ச் 20-ஆம் தேதி முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு எழுத விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்வு உதவி மையங்கள் இம் மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


COMMON - RECRUITMENT 2019

(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)