Sunday, September 30, 2018

NEET & JEE EXAM 2019 - Important Dates!

தொடர்புடைய படம்


Public Notice Aadhaar Read More
Public Notice for UGC-NET Read More
Public Notice for JEE-Main Read More
NTA Exams Press Release Read More

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை



இந்திய தொலைத்தொடர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நேரடியாயாக நியமிக்கப்பட உள்ள 198 இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Telecom Officer

காலியிடங்கள்: 198

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE-2019 தேர்வு எழுதி, தேர்வு முடிவு அறிவுக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க வேண்டும். GATE-2019 தேர்வு முடிவுக்கான தகவல்களை www.gate.iitm.ac.in வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 விவரங்கள் அறிய Click Here

தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் நிறுவனத்தில் அதிகாரி வேலை

esic க்கான பட முடிவு

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தில் (எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன்) சோசியல் செக்யூரிடி அதிகாரி, கிரேடு 2 மேலாளர், சூப்பரண்டென்டண்ட் பிரிவுகளில் காலியாக உள்ள 539 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Social Security Officer/ Manager Gr-II/ Superintendent

வயது வரம்பு: 05.10.2018 தேதியின் அடிப்படையில் 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவதொரு பிரிவில் பட்டம் (வணிகவியல், மேலாண்மை,சட்டம்) பெற்றிருப்பதுடன் கூடுதலாக கணினி தொடர்புடைய தகவல்கள் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய Click Here

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.10.2018

பொறியியல், ஐடி, சட்டம் முடித்தவர்களுக்கு இந்திய கப்பல் படையில் வேலை


இந்தியாவின் பாதுகாப்பு துறையின் கப்பல் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 37 
1. SSC (Logistics) - 20
2. SSC ( IT) - 15
3. SSC (Law) - 02 

வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1994 - 01.01.2000 க்குள் பிறந்தவர்களும், சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1992 - 01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., எம்.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி.,(ஐ.டி.,)யுடன் நிதியியல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவு ஏதாவது ஒன்றில் டிப்ளமோ முடித்தவர்கள், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) பி.ஆர்க்., போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவதொன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பி.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., ஐ.டி, எம்.டெக்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்ட படிப்பு முடித்துவிட்டு வழக்கறிஞர் சட்டம் 1961 கீழ் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரகங்கள் அறிய Click Here

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.10.2018

தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணி


தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 28

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
அரசு தலைமை வழக்குரைஞர், 
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், 
உயர்நீதிமன்றம், சென்னை - 600 104. என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் (விரல்ரேகை) உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 13-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2012 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இன்று (செப்.28) கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடை தேதி அடுத்த மாதம் 13.10.2018 தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய www,tnsrbonline.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.