Saturday, November 3, 2018

பவர்கிரிட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை


பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன. 

பதவி: Assistant Engineer (Safety)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Officer (Accounts) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Sr.Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Dy.Manager (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergrideindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

ஐடிஐ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

Central Coalfields Ltd க்கான பட முடிவு

ராஞ்சியில் உள்ள மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் (Apprentice) பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Central Coalfields Ltd

பதவி: Trade Apprentice

காலியிடங்கள்: 760

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fittre - 145
2. Welder - 75
3. Electrician - 180
4. Mechanic Auto Mobile Electronics - 75
5. Mechanic (Repair & Maintanice of Heavy Vehicle) - 75
6. Computer Operator and Programming Assistant - 100
7. Pump Operator Cum Mechanic - 60
8. Mechanist - 25
9. Turner - 25

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள், உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.centralcoalfields.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2018

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தொடர்புடைய படம்

2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. 2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு. அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்- தமிழக அரசு.

அரசாணை

தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

tn govt jobs க்கான பட முடிவு

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நீங்கள் எந்தத் துறையில் டிகிரி முடித்திருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

மேலாண்மை : தமிழக அரசு 

துறை : இந்து அறக்கட்டளைத் துறை 

பணி : நிர்வாக அதிகாரி 

மொத்த காலிப் பணியிடம் : 55 

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு 

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03 

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 2018 டிசம்பர் 05 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:Click Here

TNPSC GROUP 2 HALL TICKET வெளியீடு

TNPSC GROUP 2 HALL TICKET க்கான பட முடிவு

HAll Ticket Link

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை.எண் 15/2018 நாள் 10.08.2018 ன் படி அறிவிக்கப்பட்ட 1199 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள்) தொகுதி – II பணிக்கான முதனிலை எழுத்து தேர்வு வரும் 11.11.2018 அன்று முற்பகல் சென்னை உட்பட 32 மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கென 6,00,000 ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்ளைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net / tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application .No) அல்லது பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது Contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.