Monday, July 23, 2018

பட்டப்படிப்பு மறுமதிப்பீடு முடிவுகள்: சென்னைப் பல்கலை. இன்று வெளியீடு

Image result for சென்னைப் பல்கலை. இன்று வெளியீடு

இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளது.இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வெழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு www.results.unom.ac.in . http://egovernance.unom.ac.in ஆகிய இணையதள முகவரிகளில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Image result for ளஸ் 2  தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுளளன. 

தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாவே செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு புதன்கிழமை (ஜூலை 25), வியாழக்கிழமை (ஜூலை 26) ஆகிய இருநாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

விடைத்தாள் நகல் பெற பகுதி- 1 மொழிப் பாடத்துக்கு ரூ.550, பகுதி -2 மொழிப்பாடத்துக்கு (ஆங்கிலம்)- ரூ.550, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மறுகூட்டலுக்கு பகுதி- 1 மொழிப்பாடம், பகுதி- 2 மொழிப்பாடம் (ஆங்கிலம்), உயிரியல் ஆகியவற்றுக்கு தலா ரூ.305; பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

TNPSC POSTS INCLUDED IN THE COMBINED ENGINEERING SERVICES EXAMINATION, 2012-2013, 2015-2016 & 2016-2017 Certificate Verification List Published

Related image

Name of Post

POSTS INCLUDED IN THE COMBINED ENGINEERING SERVICES EXAMINATION,2012-2013,2015-2016 & 2016-2017

Certificate Verification List Published (23.7.2018)

போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு


இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கும், இந்தியன் வங்கிசுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபி பயிற்சியை ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.சுய வேலை வாய்ப்பில் ஆர்வமுள்ள, 10ம் வகுப்பு வரை படித்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ம் தேதி. பயிற்சி திட்ட பாடங்கள் ஸ்கில் இந்தியா பாட திட்டத்துடன் இணைக்கப்பட்டது. பயிற்சிகள் அனைத்தும் முழு நேர பயிற்சியாக அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் 240 மணி நேரம் (30 நாட்கள்).இந்நிறுவனம் மூலம், கடந்த 9 ஆண்டுகளில், 211 பயிற்சி வகுப்புகள் நடத்தி,5,755 இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சி துறை சிறந்த பயிற்சி நிறுவனமாக தேர்வு செய்து, முதல் பரிசு வழங்கியது.பயிற்சி காலத்தில் சுய தொழில் பயிற்சியுடன் தொழில் முனைவோர் பயிற்சியான (இ.டி.பி., பயிற்சி) சேர்த்து வழங்கப்படும். பயிற்சிக்கு பின் கடன் பெற ஆலோசனைகளும் அளிக்கப்படும். பயிற்சி மற்றும் பயிற்சிக்கு தேவையான பொருட்களுக்கான கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சிகள் அனைத்தும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை முழு நேர பயிற்சியாக அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 258, லெனின் வீதி, குயவர்பாளையம் (மணிமேலை பள்ளி எதிரில்), புதுச்சேரி. தொலைபேசி 0413-2246500, மொபைல்போன் 7598266671 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிஆர்ஓ வேலை வாய்ப்புகளை BE மாணவர்கள் பயன்படுத்த முன்வர வேண்டும்:- இயக்குனர் தகவல்!

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 | PUBLICATION OF CERTIFICATE OF MARKS | இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

Image result for trb

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு (தாள்-1) கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட்டது. அத் தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் இந்த இணைய தளத்தில் தங்கள் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்கப் படுகிறது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-28272455, 7373008144, 7373008134 இந்த ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்புகொள்ளலாம். தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் செல்லத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 21-07-2018

Chairman