Sunday, June 16, 2019

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

கடலூர் மாவட்ட நீதித்துறை க்கான பட முடிவு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: கணினி இயக்குபவர் - 01
தகுதி: கணினி அறிவியலில் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது பி.ஏ, பி.காம் உடன் கணினியில் பட்டயப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் பரிசோதகர், படிப்பாளர்
காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 11
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 15
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 07
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 32க்குள்ளும், ஆதிதிராவிட பழங்குடியினர், அருந்ததியர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை கல்வி தகுதியை விட அதிக கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
கடலூர், கடலூர் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019

விவரங்கள் Click Here

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை... டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 500

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engineering - 315 
2. Electrical and Electronics Engineering - 35 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

1. Civil Engineering - 135 
2. Electrical and Electronics Engineering - 15 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2019

விவரங்கள் அறிய → Click Here

BEL நிறுவனத்தில் பொறியாளர் வேலை


பொதுத்துறை நிறுவனமான "பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineers

காலியிடங்கள்: 25

காலியிடங்கள்: மெக்கானிக்கல் - 05, எலக்ட்ரானிக்ஸ் - 20

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஅல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2019 (எழுத்துத் தேர்விற்கான் அழைப்பு கடிதம் 01.07.2019 தேதிக்குப் பின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2019

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


சென்னை மத்திய பாலிடெக்னிக் காலியிடங்களில் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து மத்திய பாலிடெக்னிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அமைப்பியல், மின்னியல், மின்னணுவியல் தொடர்பியல், கணினி, இயந்திரவியல், மீனியல், மெரைன் போன்ற துறைகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 21 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.