Sunday, August 5, 2018

சென்னைப் பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: ஆக.6 -இல் வெளியீடு

சென்னைப் பல்கலை க்கான பட முடிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. 

தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in http://egovernance.unom.ac.in ஆகிய இணையதங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், தற்காலிக பட்டச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி

மத்திய அரசு கல்வி உதவித் தொகை க்கான பட முடிவு

மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்.

இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு: 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை http://scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தையும் 2015, 2016, 2017-ஆம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.