Monday, June 4, 2018

IBM Off Campus 2018 @ CMS College of Science and Commerce, Coimbatore on 6th June 2018

Image result for IBM Off Campus 2018

Company Name: IBM

Post Name: Technical Support - Help Desk process

Skills required:

Good Communication Skill
Good Analytical Skills

Qualification:  Any Degree

Experience: Freshers (2018 Batch)

Interview Process
Initial screening & assessment of communication skills (In person)
Voice & Accent Assessment (In person)
Technical Interview & HR

Walk in Location: Coimbatore

Joining location: Bangalore or Hyderabad.

Walk in Date: 6th June 2018 Time: 08.30 AM

Note: Eligible Candidates can directly attend Walk in Interview to Below Mentioned Address

College Address and Venue:
CMS College of Science and Commerce,
Chinnavedampatti,
Coimbatore - 49

For further details contact Mr. Amarnath, Placement Officer  98430 65771

EXIMIUS DESIGN Off Campus 2018 @ Karpagam College of Engg Coimbatore on 6th June 2018

Image result for off campus

Company Name: EXIMIUS DESIGN

Post Name: Various Posts

Skills required:

Good Communication Skill
Good Analytical Skills

Qualification: 

B.E/B.Tech - ECE, EEE, VLSI & EIE

Experience: Freshers 

Walk in Location: Covai

Walk in Date: 6th June 2018 Time: 09.00 AM

Note: Eligible Candidates can directly attend Walk in Interview to Below Mentioned Address

College Address and Venue:
Karpagam College of Engineering,
Myleripalayam Village, Othakalmandapam Post,
Coimbatore. 0422-2619050

பணியில் அமர்த்த லாயக்கில்லாத 94 சதவீத BE பட்டதாரிகள்

Image result for பட்டதாரிகள்

நாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக, பிரபல, தகவல் தொழில் நுட்ப நிறுவன நிர்வாகி கூறியுள்ளார். 'இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலையில் நியமிக்க தகுதி அற்றவர்கள்' என, அவர் கூறியிருப்பது, இன்ஜினியரிங் மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்தாண்டு, 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' என்ற வேலை மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 'நாட்டின், 95 சதவீத இன்ஜினியர்கள், மென்பொருள் மேம்பாட்டு வேலையில் சேர்க்க தகுதி அற்றவர்கள்' எனத் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவை, பிரபல தகவல் தொழில் நுட்ப வல்லுனர், மோகன்தாஸ் பாய், திட்டவட்டமாக மறுத்தார். 'இந்த ஆய்வு முடிவுகள், வெறும் குப்பை' என, அவர் கடுமையாக சாடி இருந்தார்.

'மணிபால் குளோபல் எஜுகேஷன்' நிறுவன தலைவரான, மோகன்தாஸ் பாய், 'இன்போசிஸ்' நிறுவன இயக்குனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர். 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' ஆய்வு முடிவை, பயோகான் நிறுவன தலைவர், கிரண் மஜும்தாரும் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய தகவல் தொழில் நுட்ப துறை ஜாம்பவான்களில் ஒருவரான, டெக் மஹிந்திரா நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான, சி.பி.குர்னானி கூறியுள்ளதாவது:

இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மோசமாக உள்ளதால், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலைக்கு தகுதி அற்றவர்களாக உள்ளனர். நாட்டின், 10 முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 6 சதவீதம் பேரை மட்டுமே பணியில் அமர்த்துகின்றன. மீதமுள்ள, 94 சதவீதம் பேரின் நிலை என்ன?

வேலையில் நியமிப்பதற்கான திறனுடன் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இல்லாததால், அவர்களை பணியில் அமர்த்திய பின், அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காகவே, டெக் மஹிந்திரா நிறுவனம், 5 ஏக்கர் நிலத்தில், 'டெக் அண்ட் லேர்னிங் சென்டர்' என்ற பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. பிற முன்னணி நிறுவனங்களும், பயிற்சி மையங்களை நிறுவி, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.

வேலையில் நியமிக்கப்படும் பட்டதாரிகளை, விஷய ஞானம் உள்ளவர்களாக, தக்க திறன் பெற்றவர்களாக, வேலைக்கு உகந்தவர்களாக மாற்றும் பெரிய பொறுப்பு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தலையில் விழுந்துள்ளது.

டில்லி போன்ற பெரிய நகரங்களில், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதில்லை; மாறாக, இன்ஜினியரிங் படிப்பில் சேர்கிறான். இத்தகைய மாணவர்களை, வேலையில் சேர்வதற்கான தகுதி உடையவர்களாக மாற்றும் வகையில், நம் கல்வி இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு, திறமைசாலிகளே தேவை. 2022க்குள், தகவல் தொழில் நுட்ப துறைக்கு, 60 லட்சம் ஊழியர்கள் தேவை என, 'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென் பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. ஆனால், நம்மிடம் திறமைசாலிகளுக்கு பற்றாக்குறை உள்ளது; இது, மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குர்னானியின் கருத்து, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. இக்கருத்து, இன்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


தரமற்ற கல்லுாரிகளுக்கு மூடுவிழா :

இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பின் தரம் மிகக் குறைவாக உள்ளதென்ற கருத்து, சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற, தொழில்நுட்ப கல்வி மையங்கள் தவிர, பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுாரிகளால், தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியவில்லை. தரம் குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகள், நாடு முழுவதும் புற்றீசல் போல், பல ஆண்டுகளாக முளைத்து விட்டதே, இந்த நிலைக்கு காரணம் என, இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால், இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, இத்தகைய கல்வி நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நடப்பாண்டில் மட்டும், 80 ஆயிரம் இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3.1 லட்சம் இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

கடந்த நான்கு ஆண்டுகளில், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

1.4 சதவீதம் மட்டுமே, 'ஓகே' :

'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' நிறுவனம் நடத்திய ஒரு தேர்வில், 4.77 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒரு மென்பொருளுக்கான, சரியான தர்க்கத்தை எழுதக் கூடியவர்களாக இருந்தனர். 500 கல்லுாரிகளில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பயின்ற, 36 ஆயிரம் பேர், 'ஆட்டோமேடா' என்ற, மென்பொருள் மேம்பாட்டு திறன் மதிப்பீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 60 சதவீதம் பேரால், சரியான மென்பொருள் கட்டளைகளை எழுத இயலவில்லை. 1.4 சதவீதம் பேர் மட்டுமே மிக சரியான மென் பொருள் கட்டளை எழுதுபவராக இருந்தனர். 'மெக்கானிகல் டிசைன்' இன்ஜினியர்களில், 5.55 சதவீதம் பேர், சிவில் இன்ஜினியர்களில், 6.48 சதவீதம் பேர், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களில், 7.07 சதவீதம் பேர் மட்டுமே, பணியில் அமர்த்தக்கூடிய திறன் பெற்றவர்கள் என, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' கூறியுள்ளது.

போட்டித் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Image result for tnpsc

போட்டித் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதற்குரிய உத்தேச காலத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.



ஜூன் 11 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

Related image

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியானது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திங்கள்கிழமை (ஜூன் 4) வெளியிடப்பட்டது. இதனையடுத்து எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த இடங்கள்: 

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அதே போன்று தமிழகத்தில் உள்ள 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது.

11-ஆம் தேதி முதல் விநியோகம்: 

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும்.

தரவரிசைப் பட்டியல்: 

தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும். இருப்பினும் அகில இந்திய கலந்தாய்வு தேதிகளின்படி கலந்தாய்வு தேதியில் மாற்றம் வரலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC CALANDER FOR 2019

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும்

Image result for மருத்துவ மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19 கடைசி நாள் என்றும் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூன் 28ம் தேதி அறிவிக்க வாய்ப்பு என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

Polytechnic Result April -2018 Published now!


Result

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு

Image result for anna university

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1,52,940 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும். இதற்கான நேரம், தேதி ஆகியவவை அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை செவ்வாய்கிழமை (ஜூன் 5) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

1முதல் 5 வரை வகுப்புகளுக்கான கால அட்டவணை!!!