Monday, February 11, 2019

பிப்ரவரி 07, நடப்பு நிகழ்வுகள் 2019

நடப்பு நிகழ்வுகள்2019 க்கான பட முடிவு

உலக செய்திகள்

1. உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் ((David Malpass)) பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

2. நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு(NATO – North Atlantic Treaty Organization) அமைப்பு உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் பொருட்டு லண்டனில் டிசம்பர் மாதத்தில் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

தேசிய செய்திகள்

1. எல் அண்ட் டி(L and T) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் மணிபாய் நாயக்(குஜராத்) 52 ஆண்டு பணிக்காலத்தில் எடுக்காத விடுமுறை நாட்களுக்கு உரிய ஊதியமாக 19 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.

2. பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் 2 ஆயிரத்து 685 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சுகாதார சீரமைப்புத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

4. திருடப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை கண்டறிவதற்காக “DIGICOP” என்ற மொபைல் செயலியை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

5. மனிதர்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘கிளிபோசேட்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு கேரள அரசு முழு தடை விதித்துள்ளது.
தேசிய அளவில் "ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்" என்ற பெயரில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

6. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய எல்பிஜி உச்சிமாநாடு புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

7. ஏர் இந்தியா சி.எம்.டி. பிரதீப் சிங் கரோலா சிவில் விமானதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

1. இதயத்தின் இயக்க சக்தியைக் கொண்டே பேஸ்மேக்கர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

வர்த்தக செய்திகள்
1. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கு புதிய துணைத் தலைவராக ஏஞ்சலா ஆரண்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 06, நடப்பு நிகழ்வுகள் 2019

நடப்பு நிகழ்வுகள்2019 க்கான பட முடிவு

உலக செய்திகள்
1. 67 வது ஆயுதப் படைகளுக்கான மருத்துவ மாநாட்டு புனேவில் (மகாராஷ்டிரா) நடைபெற்றது

2. நிலம்பார் ஆச்சார்யா(Nilambar Acharya) இந்தியாவுக்கான நேபாள தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய செய்திகள்

1. நாடு முழுவதும், பிரதான் மந்திர உஜ்ஜவாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், 6.23 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2. ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயூஷ் எனப்படும் ஆயுர்வேத, யோகா , யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது

3. கொல்கத்தாவிற்கு அருகே உள்ள மாயாபூரில்(மேற்கு வங்கம்) உலக பாரம்பரிய மையம் (WHC – World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது. இதில் 45 நாடுகளின் ‘ஆன்மீக முகாம்கள்’ (SpiritualCamps) அமையவுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 3000 கோடி ஆகும்.

4. விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டமான “கலியா சக்ரவிருதி யோஜனா” (Kalia Chhatravritti Yojana) என்னும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
1. மாணவர்கள் தங்கள் கணினி அல்லது செல்பேசி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளும் வகையில் தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency), “NTA Students App” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வர்த்தக செய்திகள்
1. மகாராஷ்டிரா புனேயில் விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விவசாய ஏற்றுமதிக் கொள்கை பற்றிய முதல் நிலை விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள்
1. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் நடைபெற்ற 2019 – WTA (Women’s Tennis Association) டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீராங்கணை கிக்கி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

வேலைவாய்ப்பு அவலம்: 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கு 4600 பட்டதாரிகள் விண்ணப்பம்!

துப்புரவு தொழிலாளர் க்கான பட முடிவு

இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கு 4600 பேர் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள்(ஜிஎஸ்டி) அமலாக்கத்துக்கு பின்னர், நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலும், 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

14 பணியிடங்கள் கொண்ட அந்த பணிக்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைதுறை பட்டதாரிகள் மற்றும் எம்பிஏ, முதுகலை பட்டதாரிகள் என 4 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. 

இதனிடையே, மக்களவைத் தோ்தல் முடிவுற்ற பின்னரே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தோ்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இந்த பணிக்கான அடிப்படை சம்பளம் அதிகமாக உள்ளதாலும், நாட்டில் நிலவி வரும் வேலை வாய்ப்பிண்மை போன்ற நிலையால் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளும் துப்புரவு தொழிலாளர் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக அனைத்து தரப்பிலும் பரவலாக பேசப்படுகிறது.

தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!


தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனமான தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாள்ர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.1.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடம்: 02 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: இளநிலை வேதியியலாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500

பணி: வேதியியலாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, தேர்வுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே ஒரு முறை பதிவுக்கட்டணம்ரூ. 150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019

விபரங்களை அறிய Click Here