Sunday, September 23, 2018

IPRC Tirunelveli 205 Apprentices Recruitment 2018

ISRO க்கான பட முடிவு


Organization   Name
ISRO Propulsion Complex (IPRC) Mahendragiri, Tirunelveli
  Website
www.iprc.gov.in
Job Location
Mahendragiri, Tirunelveli
JobCategory
Central Govt Jobs
No. of Posts
205
Name of the Posts
Apprentices
Qualification
ITI, Diploma, B.E/B.Tech, B.Lib

Selection Procedure
Percentage of Marks Secured in the Qualifying Examination, Interview
Date of Interview
29.09.2018, 06.10.2018 & 13.10.2018

Notification & Application Form Link: 
Official Notification: Click Here
Application Form PDF: Click Here

Tamilnadu Cements Corporation Limited Recruitment 2018


Tamilnadu Cements Corporation Limited க்கான பட முடிவு

Org  Name
Tamilnadu Cements Corporation Limited
Website
www.tancem.com
Job Location
Tamilnadu
Job Category
Tamilnadu
No. of Posts
46 Vacancies
Name of the Posts

Junior Assistant, Shift Chemist, Assistant Manager, Deputy Manager, Electrician, Time Keeper & Other Posts
Qualification

10th, 12th, ITI, B.E/B.Tech, B.Sc, MBA, CA / CMA
Selection
Merit List, Interview
Apply Mode
Offline
Start Date
16.09.2018
Last Date
10.10.2018


 Website Page: Click Here
Application Form : Click Here

அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு

trb க்கான பட முடிவு

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரி களில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு கால அட்ட வணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டப் பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வுகள் அக்டோபர் 13 முதல் 16-ம் தேதி வரையும், சட்டம் அல்லாத பாடப்பிரிவுகளில் (அரசியல் அறிவி யல், பொருளாதாரம், ஆங்கிலம், சமூகவியல், வரலாறு) உள்ள காலியிடங்களுக்கான தேர்வுகள் அக்டோபர் 13 முதல் 17-ம் தேதி வரையும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆசிரிய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆசிரிய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: பாச்சுலர் ஆப் எஜூகேஷன் (பி.எட்.,)

தகுதி விண்ணப்பிக்க விரும்புவோர் 11+1+3 அல்லது 10+2+3 என்கிற கல்விதிட்ட முறையில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். என்.சி.டி.இ., சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையத்தளத்தில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரியில் நேரடியாகவோ, அஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: www.tnou.ac.in
ecil க்கான பட முடிவு

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

காலியிடங்கள்: 250

டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 60
2. Turner - 10
3. Machinist - 01
4. Sheet Metal Worker - 03
5. Electrician - 50
6. Mechanic R & AC - 09
7. Motor Mechanic Vehicle - 01
8. Electronics Mechanic / R & TV - 86

உதவித்தொகை: மாதம் ரூ.8,655 வழங்கப்படும்.

9. Copa - 10
10. Welder - 10
11. Plumber - 03
12. Carpenter - 05
13. Diesel Mechanic - 02

உதவித்தொகை: மாதம் ரூ.7694 வழங்கப்படும்.

தகுதி: சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே, தொழில்பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம்: Plumber, Carpenter, Dieseal Mechanic டிரேடுகளுக்கு 2 ஆண்டுகளும் மற்ற அனைத்து டிரேடுகளுக்கும் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த பின்பு www.ecil.co.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Deputy General Manager (CLDC), Nalanda Complex, Near TIFR Building, ECIL-Post, Hyderabad - 500 062. Telengana.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2018

விவரங்கள் அறிய Click Here

பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், எச்ஆர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Ltd

மொத்த காலியிடங்கள்: 42

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Engineer - 38
பதவி: IT&S Officer - 01
பதவி: Human Resources Officer - 02
பதவி: Safety Officer - 01

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் Technology in Chemical, Petroleum, Petrochemicals, Mechanical , Electrical, Electrical & Electronics, Civil, Computer Science, Information Technology, Electronics & Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மனிவள பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ, பணியாளர் மேலாண்மை, தொழிற்துறை உறவுகள், தொழிலாளர் நலன், சமூக பணி, வணிக நிர்வாகத்தில் (எம்பிஏ) முதுகலை பட்டம் பெற்றவர்கள், தொழில்துறை பாதுகாப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2018

விவரங்கள்அறிய Click Here

அஞ்சல் துறையில் மெக்கானிக், எலக்ட்ரீசியன் வேலை


இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் 2015-16, 2016-17, 2017 - 18-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற 19 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

பதவி: Motor Vehicle Mechanic - 08 
பதவி: Motor Vehicle Electrician 4
பதவி: Blacksmith - 2
பதவி: Tyreman - 2
பதவி: Painter - 1
பதவி: Upholsterer - 1
பதவி: Carpenter & Joiner - 1

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்திருக்க வேண்டும் அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பதவிக்கு விண்ணப்பிப்பவரகள் இலகுரக அல்லது கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’ 

மேலும் விண்ணப்பிக்கும் முறை: தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/Artisan_Notification200918.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலிப் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடர்புடைய படம்

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: 

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நபர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

last date 26.09.18

பரவு நோயியல் படிப்பு: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் க்கான பட முடிவு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரவு நோயியல் துறையில் 3 பட்ட மேற்படிப்புகளும், 4 பிரிவுகளில் முனைவருக்கான ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு, கல்வி, பொது சுகாதார இதழியியல் ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தை வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

தொடர்புடைய படம்

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான "குரூப் சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: Grop 'C' Post (Sorts Quota)

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ மற்றும் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக், தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விளையாட்டு திறன் மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.250. இதனை "Assistant Personnel Officer/HQ; South Western Railway, Hubballi" என்ற பெயரில் குறுக்குக்கோடிட்ட IPO-ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Personnel Officer (HQ), 
Railway Recritment Cell, 2nd Floor, 
Old G.M.S. Office Building, 
Club Road, Huballi - 580 023.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2018

விவரங்கள் அறிய Click Here


10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத் தேர்வு முறை ரத்து



தமிழகத்தில் வரும் கல்வியாண்டு (2019-20) முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத் தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

செம்டம்பர் மாத தேர்வு ரத்து ஏன்?: உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத் தேர்வு, உடனடி சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொதுத் தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளபடி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும்.

பணிச் சுமை காரணமாகவும்... இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்துப் பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத் தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஆசிரியர் பணியும் பாதிப்பு: மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.

எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அரசிடம் கேட்டுள்ளார்.

அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு (2019-2020) முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத் தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.