Sunday, August 4, 2019

POSTAL EXAM 2019 | ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய படம்

அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த மாதம் 11-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இனி அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் அவசர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கி யது. ஆனால், தேர்வு முடிவுகளை வௌியிட தடை விதித்தது. இதையடுத்து, அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது. இந்நிலை யில் அரசியல் கட்சிகளின் எதிர்ப் பால் மத்திய அரசு இத்தேர்வை ரத்து செய்தது. மறுதேர்வு உள் ளூர் மொழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், தபால்காரர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் செப்.15-ம் தேதி தேர்வு நடைபெறும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இத்தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர உள்ளூர் மொழிகளில் கேள்வித்தாள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.