Friday, November 30, 2018

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை



சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21 

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 + 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் 

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு வயதுவரம்பில் உச்ச வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்: இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) அலுவலகங்களிலும், சென்னை மற்றும் வேலூர், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் சென்னை, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலும் சமர்ப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், 
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 
6வது தளம், டி.எம்.எஸ். வளாகம், 
சென்னை - 600 006. 
தொலைபேசி 044 2433 9934

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

விவரங்கள் அறிய Click Here  அல்லது  click here


பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை


ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63 (ஆண்கள்-53, பெண்கள்-10) 

பதவி: Security Agents 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தீயணைப்பு மற்றும் பேரீடர் மேலாண்மை மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 28 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20.190

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Play Ground, Residential Complex, 
New Quarters, 
Airport Authority of India, 
1 no. Airport
Gate (VIP Road), 
Dum Dum, Kolkata-700 052.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வலையில் “AIR INDIA LTD” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்ணை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அதனுடன் அசல் சான்றிதழ்கள் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 
 
விவரங்கள் அறிய  Click Here

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.