Sunday, August 12, 2018

TNUSRB - 2018 : காவலர் தேர்வு முடிவு வெளியீடு

TNUSRB க்கான பட முடிவு

✍ கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய தேர்வு நடைபெற்றது.

*✍சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்த பட்டது.

*✍தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிட பட்டு உள்ளது.

*✍ தேர்வு முடிவுகளை கான

வரும் 13ல் பிளஸ் 1 துணை தேர்வு 'ரிசல்ட்'

பிளஸ் 1 துணை தேர்வு 'ரிசல்ட்' க்கான பட முடிவு

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு

பிளஸ் 1 வகுப்புக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வு முடிவுகள், வரும், 13ல் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். 

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு, தலா, 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாயும், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சித்தா படிப்பு: 14ல் விண்ணப்பம்

தொடர்புடைய படம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்டஇந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, ஆறு அரசு கல்லுாரிகளில், 396 இடங்கள்; 23 சுயநிதி கல்லுாரிகளில், 916 இடங்கள் உள்ளன. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை, நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம் மற்றும் நாகர்கோவில் - கோட்டாரில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 14 முதல், செப்., 5 வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சிப் படிப்பு: சிறுபான்மையினருக்கு உதவித் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

ஆராய்ச்சிப் படிப்பு க்கான பட முடிவு

சிறுபான்மையினர் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்க கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஒன்று முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.scholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் அளிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களையும் இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.  தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு அறிவிக்கை 1,199 காலிப் பணியிடங்கள்




நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள ஆயிரத்து 199 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப். 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கை: இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (16 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர் (26), சார்-பதிவாளர்கள் (73), நகராட்சி ஆணையாளர் (6), உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் (95), வேளாண் விற்பனை சேவை கண்காணிப்பாளர்கள் (118) உள்பட ஆயிரத்து 199 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை பட்டப் படிப்பு முடித்தவர்கள் எழுதலாம். ஆனால், தொழிலாளர் நலத் துறை, வேளாண்மை உள்ளிட்ட சில துறைகளுக்கான எழுத்துத் தேர்வினை எழுத அந்தத் துறை தொடர்பான பட்டப் படிப்புகளைப் படித்திருக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

முதல் நிலைத் தேர்வு

குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் (http://www.tnpscexams.in/) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பிரதானத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வும்-தேர்வுக் கட்டணமும்...:

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்தால் பதிவுக் கட்டணம் செலுத்தி தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யாவிட்டால், ரூ.150 கட்டணம் செலுத்தி முதலில் பதிவு செய்ய வேண்டும். இதன் பின், முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.100 கட்டணமும், அதில் தேர்ச்சி பெற்று பிரதானத் தேர்வுக்குச் செல்வோர் ரூ.150-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

முதல் நிலைத் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பொது அறிவு உள்ளிட்ட விஷயங்கள், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பிட்ட அளவு வினாக்கள் பத்தாம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டும் கேட்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களாக 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேட்’ தேர்வு குறித்த அறிவிப்பு

தொடர்புடைய படம்

எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., போன்ற மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய அளவில் நடத்தப்படும் ‘மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ (மேட்) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். ஏ.ஐ.எம்.ஏ., மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

தேர்வு முறை: பேப்பர் மற்றும் கம்ப்யூட்டர் என இரண்டு முறையில், ‘மேட்’ தேர்வு நடைபெறும். மாணவர்கள் விரும்பும் முறையை தேர்வு செய்துகொள்ளலாம். தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில் தேர்வு நடைபெறும்.

பேப்பர் அடிப்படையிலான தேர்வு: செப்டம்பர் 2
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 24

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு: செப்டம்பர் 15
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 11

விபரங்களுக்கு: www.aima.in