Tuesday, June 19, 2018

TNPSC AUTOMOBILE ENGINEER IN THE MOTOR VEHICLES MAINTENANCE DEPARTMENT Certificate Verification list

Related image

Certificate Verification list
  (CV-III)

Tirunelveli District Court Result Published

Image result for Tirunelveli  District Court

Post Name 
Sweeper

Result Link


சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது

Image result for எந்திர கருவிகள் கண்காட்சி

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வரும் 25–ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது

சங்க தலைவர் டி.ரவி, கண்காட்சி தலைவர் கே.அய்யப்பன், கன்வீனர் ஆர்.எஸ்.எஸ்.சதீஷ்பாபு, சங்க ஆலோசகர் எம்.பாலசந்திரன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாது:–

சக்தியை சேமிப்பதற்கான தீர்வுகள், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், தொழில்முறை ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியக்கம் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் தொடர்பாக சென்னை, வர்த்தக மையத்தில் வரும் 21–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை 5 நாட்கள் 13–வது ‘சர்வதேச எந்திர கருவிகள் (மெஷின் டூல்ஸ்) கண்காட்சி நடக்கிறது. 

இதனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார். துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொழில் துறை அமைச்சர் பி.பென்ஜமீன் முன்னிலை வகிக்கிறார். 28 நாடுகளைச் சேர்ந்த 480 நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் 10 ஆயிரத்து 50 சதுர மீட்டர் பரப்பில் பிரம்மாண்டமான 5 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

ரூ.500 கோடிக்கு வர்த்தகம்

கண்காட்சியில் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கண்காட்சி தினசரி காலை 10 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். 50 ஆயிரம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொழில்களின் போக்குகளை கருத்தில் கொண்டு, தொழில்முறையில் இணையதளம், செலவைக் குறைத்தல், துல்லியம், போட்டி நிறைந்த சூழலில் நேரத்தையும், சக்தியையும் சேமித்தல் ஆகியவற்றுக்கான தீர்வுகளை இந்த கண்காட்சி அளிக்கிறது. 

தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் செய்துள்ள திட்டங்களை எடுத்துக்காட்டுவதற்காக, தனியாக இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் ரோபோக்களும் கொண்டுவரப்பட்டு செயல்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் இந்தியாவில் உருவாக்கு (‘மேக்–இன்–இந்தியா) என்ற திட்டத்திற்கும் இந்த கண்காட்சி நேரடியாக உதவும். தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

அண்ணாமலைப் பல்கலை. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Image result for அண்ணாமலைப் பல்கலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018 -19 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கீழ்கண்ட பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு பாடப் பிரிவுகளைப் பொறுத்து, முதல்கட்டமாக முறையே கடந்த 14, 15 -ஆம் தேதிகள் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது வருகிற 30 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்தப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.

படிப்புகள் விவரம்: 

எம்.ஏ. அனைத்துப் பாடப் பிரிவுகள், எம்.காம், எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஹெச்.எஸ்.எஸ், எம்.ஆர்.எஸ், எம்.எஸ்சி. (மரைன் சயின்ஸ்), எம்.எஸ்சி. நர்சிங், எம்.பி.ஏ, M.Lib.I.Sc. / B.Lib.I.Sc. / B.P.Ed. / M.P.Ed. / Diploma in General Nursing and Midwifery, M.P.T. / Certificate Programme in Dental Mechanist, etc.,All Music Programmes.

10ம் வகுப்பு துணை தேர்வு 'ஹால் டிக்கெட்'

Image result for 0ம் வகுப்பு துணை தேர்வு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 21) முதல் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் அலுவலகம் வெளயிட்ட செய்தி: 

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களும், செய்முறைத் தேர்வில் பங்கேற்று 15 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களும் சிறப்புத் துணைத் தேர்வில் எழுத்துத் தேர்வுடன் செய்முறைத் தேர்வையும் எழுத வேண்டியது கட்டாயம்.

தேர்வறை அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே ஜூன் 25, 26 ஆகிய இரு நாள்கள் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். 

எனவே, தேர்வு மைய தலைமையாசிரியரை தேர்வர்கள் அணுகி விவரத்தைத் தெரிந்துகொள்வதும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: சேர்க்கை பெற கால அவகாசம் நீட்டிப்பு

Image result for சென்னை பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தின் மூலமாக சேரலாம்.  சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் மையம் செயல்படும். மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in www.unom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைப்பு

Image result for மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு:

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடிஇடி) விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது
.
ஒத்திவைப்பு ஏன்?: 

தமிழ் உள்பட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பணிகளை மேற்கொள்ள வசதியாக விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா, தில்லி மாநிலப் பள்ளிகள், திபெத் பள்ளிகள் ஆகிய தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சிடிஇடி தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

2018-ஆம் ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்படும். இதற்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு வரை இந்தத் தேர்வை 20 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் உள்பட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்வர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இதுகுறித்து சுட்டுரையில் தனது கருத்தைப் பதிவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளிலும் தேர்வை நடத்த சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை சிபிஎஸ்இ இப்போது மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் தேதியை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சிடிஇடி தேர்வுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.