Wednesday, May 16, 2018

தோல்வியுற்ற, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூன் 25-இல் தேர்வு

Image result for fail student

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் ஜூன் 25-ஆம் தேதி முதல் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வெழுதாத மாணவ-மாணவிகளுக்கு வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டலுக்கு மே 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சலிங் பெற விரும்பும் மாணவர்கள் "14417' என்ற "ஹெல்ப் லைன்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் மாணவர்களுக்குத் தேவையான கவுன்சலிங் உதவிகள் கிடைக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை இயன்முறைப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Related image

முதுநிலை இயன்முறை (பிசியோதெரபி)மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவப்படிப்பில் (எம்.பி.டி.) 2018 -19 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இடஒதுக்கீடு, இளநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhealth.org www.tn medicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. 

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய மே 22 -ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு மே 23 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., ஆயுஷ்: பிளஸ் 2 மதிப்பெண் உதவாது

Image result for எம்.பி.பி.எஸ்., ஆயுஷ்: பிளஸ் 2 மதிப்பெண் உதவாது

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் உதவாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கியுள்ளது. நிகழாண்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கட் - ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அது உதவாது. குறைந்தபட்ச மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?: 

அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.) வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அனைத்தையும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் 40 சதவீத மதிப்பெண்ணும், மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண்ணும் எடுத்தால் போதுமானது.

நீட் தேர்ச்சி மதிப்பெண்: 

நீட் தேர்வில் அனைத்துப் பிரிவினர் 50%பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 40%, மாற்றுத்திறனாளிகள் 45 % பெற்றால் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எந்தப் படிப்புக்கு அவசியம்? 

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். அதே போன்று இளநிலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் அவசியம்.

BHEL Recruitment 2018 - 50 Graduate Apprentices (Engineering) Posts

Image result for BHEL Recruitment 2018 8

Org Name: Bharat Heavy Electricals Limited

Category: Central Govt 

Total No. of Vacancies: 50

Job Location: Bangalore 

Name of the Post & No of Vacancies:
Graduate Apprentices (Engineering) - 50
  • Electronics & Communication Engineering - 20
  • Electrical & Electronics Engineering - 10
  • Mechanical Engineering - 10
  • Computer Science Engineering - 10
Qualification: B.E/B.Tech

Selection Procedure : Interview

How to apply : Walk in

Walk in Venue:
BHARAT HEAVY ELECTRICALS LIMITED, 
ELECTRONICS DIVISION, 
MYSORE ROAD, 
BENGALURU - 560026

Date of Walk in Interview: 21.05.2018 9.00 A.M TO 3.30 P.M

Application Form : Click Here to Download

Indira Gandhi Centre for Atomic Research Recruitment 2018

Related image

Org Name:
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)

Category: Central Govt
Total No. of Vacancies: 248

Job Location: Kalpakkam (Kanchipuram)

Name of the Post :
  • Technical Officers
  • Scientific Assistant
  • Stipendiary Trainee 
  • Technician
  • Administrative
Qualification: 
  • 10th
  • 12th
  • ITI
  • Diploma
  • Any Degree
Selection Procedure : 
  • Written Exam,
  • Skill Test  
  • Personal Interview
How to apply : Online

Last date for Submission of Application: 17.06.2018 at 05:00 PM

IGCAR Kalpakkam Online Application & Official Notification:
Official Website: Click Here
Notification: Click Here to Download
Online Application: Click Here to Apply

National Institute for Research in Tuberculosis Chennai Recruitment 2018

Related image

Org Name: National Institute for Research in Tuberculosis

Category: Central Govt 

Total No. of Vacancies: 04

Job Location: Chennai 

Name of the Post:

1. Consultant (Non-Medical) - 03
2. Consultant (Accountant) - 01

Qualification: Bachelor Degree, Master Degre

Selection Procedure : Interview

Walk in Venue:

National Institute for Research in Tuberculosis, 
No.1, Mayor Sathyamoorthy Road, 
Chetpet, 
Chennai - 600 031

Date of Walk in Interview: 04.06.2018 9.00 AM TO 10.00 AM (interview from 11.00 AM onwards)

Official Notification: Click Here

South Indian Bank Recruitment 2018 (150 PO Posts)

Image result for South Indian Bank Recruitment 2018


Org Name: South Indian Bank Limited

Employment Category: Central Govt 

Total No. of Vacancies: 150

Job Location: All Over India

Name of Post : Probationary Officers 

Qualification: Any Degree

Selection Procedure:
  • Online Exam, 
  • Group Discussion  
  • Personal Interview
Application Fee:
  • For General/OBC - Rs.800/-
  • (ST/SC) Application - Rs.200/-
Last date for Submission of Application: 25.05.2018

South Indian Bank Limited Application & Official Notification:
Website Career Page: Click Here
Notification: Click Here
Online Application: Click Here