Saturday, October 6, 2018

Plintron Walk-In Drive For Freshers As Software Developer @ Chennai In October 2018

Plintron க்கான பட முடிவு

Organization: Name Plintron

Job Role: Software Developer

Location : Chennai

Education : BE/B Tech/MCA/M Sc

Experience : Freshers(2017 & 2018)

Job Requirements:
Must have completed BE/B Tech/MCA/M Sc from a recognised university
Should have an aggregate of 60% through out academics
Graduates of 2017 & 2018 passed outs only can apply
Must not have active backlogs
Must have good communication skills
Must sign a service agreement
Must be strong in .Net Framework , Object oriented programming, design patterns and database concepts
Must have good Knowledge in ASP.NET 2.0 /3.5/4.0, C#, SQL server 2005
Should have good knowledge in web applications ,windows services and web services
Having knowledge on AJAX, Jquery would be an added advantage
Must have knowledge on .Net Course/ certification would be an added advantage
Should have knowledge in RDBMS Concept such as T-SQL, Stored Procedure, View, Joins & Functions in SQL SERVER 2008R2
Must have ability to write a complex stored procedures
Should have knowledge in Performance Tuning, Query Optimization & Indexing
Must have knowledge in SQL Profiler
Must have SQL Course/ certification would be an added advantage
Must have good analytical and logical reasoning skills

Interview Process:
Technical Discussion
HR Discussion

Walk-In Dates 8th – 12th October 2018(10 AM- 11:30 AM)

Venue:
Plintron, Block 6, GKS Tech Park, 3rd Floor
DLF-Tech Park, 1/124 Shivaji Gardens,
Ramapuram, Chennai – 600089

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) இந்திய அரசின் கீழ் செயல்படும் நலத்திட்டங்களில் ஒன்றாகும். இச்சேவையின் மூலம் அங்கன்வாடி மையங்களைக் குறிப்பாககிராமப்புற பகுதிகளில் நிறுவப்பட்டு முன்னணி தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 

தற்போது இத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

மொத்த காலிப் பணியிடம் : 89 

திட்ட உதவியாளர்  83 

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : 06 

கல்வித் தகுதி:- 

திட்ட உதவியாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ. 

வயதுவரம்பு : 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப் படி எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு) 

முன் அனுபவம்:- திட்ட உதவியாளர் : குறைந்தது ஒரு வருடம் மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : குறைந்தது இரண்டு வருடம்

ஊதியம்:- 

திட்ட உதவியாளர் : ரூ.15000 
 
மாவட்ட ஒருங்கிணைப்பு திட்ட உதவியாளர் : ரூ.18000 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http://www.icds.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

Director Cum Mission Director, 
Integrated Child Development Project Schemes, 
No.6, Pammal Nalla thambi Street, 
M.G.R.Road, Taramani,
Chennai - 113 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 24 

விபரங்களை அறிய  Click Here

ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு!

ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கழகத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.


காலிப் பணியிடம் : 01

பணி : மூத்த திட்ட பொறியாளர்

கல்வித் தகுதி : எம்.டெக், பி.டெக் பயோமெடிக்கல்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25000 + 20 %

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறு தேதி : 2018 அக்டோபர் 11

நேரம் : காலை 10.30 மணியளவில்

தேர்வு நடைபெறும் இடம் : 
Biomedical Technology Wing, 
Satelmond Palace, 
Poojappura, 
Thiruvananthapuram-695 012

அதிகாரப்பூர்வ இணையதளமான https://sctimst.ac.in/ 

விபரங்களை அறிந்து கொள்ள Click here

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பணி


ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 390 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 390 

பதவி: தொழில்பழகுநர் பயிற்சி 

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும். பட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அக்கவுண்டன்ட் பிரிவு டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 19.9.2018 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2018

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விவரங்கள் அறிய Click Here

சேலம் அங்கன்வாடியில் 1101 வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்




சேலம் அங்கன்வாடியில் நிரப்பப்பட உள்ள 1101 அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: அமைப்பாளர் - 316

சம்பளம்: மாதம் ரூ.7700 - 24200

வயதுவரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்தச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: சமையல் உதவியாளர் - 785

சம்பளம்: மாதம் ரூ.3000 - 9000

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். 

தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத்த, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

மேலும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் மேற்படி கல்வித் தகுதியிருப்பின் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பெண்தன்மைக்கு உரிய சான்றிதழ்கள் பெற்றவர்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 15,10.2018 வரை அலுவலக வேலை நேரங்களில் வழங்கப்படும். அலுவலகத்தால் வரையறுக்கப்பட்ட படிவம் அடங்கிய விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ள தக்கதாகும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018

 விவரங்கள் அறிய  Click Here

தமிழ்நாடு வனத்துறையில் வேலை 1178 பணியிடங்களுக்கு வரும் 15 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வானக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1178

பதவி: வனத்துறை அதிகாரி - 300
சம்பளம்: மாதம் ரூ.35,900 - ரூ.1,13,500

பதவி: வனத்துறை காவலர் - 726
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900

பதவி: வனக்காவலர் - 152 (ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்) 
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தகுதி: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், பொறியியல் துறையில் (வேளாண் பொறியியல் உட்பட அனைத்து பொறியியல் பாடங்களும்) சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம் இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிர் உயிரியல், விலங்கியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.10.2018

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2018

விவரங்கள் அறிய Click Here