Saturday, April 25, 2020

B ED நுழைவுத் தேர்வுக்கு மே 4 ல் விண்ணப்பம்


நாடு முழுதும் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் சேரலாம்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர, நுழைவு தேர்வு கிடையாது. ஆனால், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும், கல்லுாரிகளில் சேருவதற்கு, பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நுழைவு தேர்வு, மே, 24ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது; விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கியது. இந்நிலையில், தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் மே4க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

திறன் வளா்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு

தொடர்புடைய படம்

திறன் வளா்ப்பு படிப்புகளை வரும் கல்வி ஆண்டில் தொடங்க விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தேசிய திறன் தகுதியை மேம்படுத்தும் விதமாக திறன் வளா்ப்பு படிப்புகளுக்கு யுஜிசி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (என்எஸ்க்யூஎப்) கீழ் திறன் அடிப்படையிலான கல்வியை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி அண்மையில் திருத்தம் செய்தது.

இந்தநிலையில், திறன் வளா்ப்பு படிப்புகளான சான்றிதழ் படிப்பு, பட்டச்சான்றிதழ் (டிப்ளமோ), முதுநிலை டிப்ளமோ, பி.வோக் (இளம்நிலை தொழில்), எம்.வோக்(முதுநிலை), ஆராய்ச்சி நிலை உள்ளிட்ட படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது

அதன்படி, புதிய திறன் வளா்ப்பு பாடத்திட்டங்களை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறன் வளா்ப்பு படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் முன்வரலாம். அதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருள்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டமைப்புக்கு தேவையான நிதியை யுஜிசி வழங்கும். மேலும், திறன் வளா்ப்பு படிப்புகளை தொடா்ந்து தங்களின் நிறுவனத்தில் நீட்டிக்க தேவையான நிதி உதவியும் வழங்கப்படும். இதற்கு விருப்பம் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் யுஜிசி-யின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் ஆமதாபாத் நகரில் செயல்படும் 'ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்' நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் சுமார் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

காலியிடம்: சயின்டிபிக் இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஸ்ட்ரக்சரல்) 21, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல்) 6, டெக்னீசியன் (பிட்டர், மெசினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., பிளம்பர், கார்பென்டர், எலக்ட்ரீசியன், கெமிக்கல்) 25, டிராப்ட்ஸ்மேன் 3 என மொத்தம் 55 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சயின்டிபிக் இன்ஜினியர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டெக்னீசியின் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: பதவி வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசி நாள்: 1.5.2020

விபரங்களுக்கு: Click Here

கலாசார நட்பு கழகத்தில் பணி

Job vacancy at IDPC - Drug Policy Network SEE


இந்திய கலாசார நட்பு கழகத்தில் 32 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம் : புரோகிராம் ஆபிசர் 8, அசிஸ்டென்ட் புரோகிராம் ஆபிசர் 10, அசிஸ்டென்ட் 7, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 2, கிளார்க் 3 என மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஜூனியர் ஸ்டெனோகிராபர் மற்றும் கிளார்க் பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : புரோகிராம் ஆபிசர் ( 18 - 35), அசிஸ்டென்ட் புரோகிராம் ஆபிசர் (35) , அசிஸ்டென்ட் (30), சீனியர் ஸ்டெனோகிராபர் (18 - 30), ஜூனியர் ஸ்டெனோகிராபர் (18 - 27), கிளார்க் (18 -27) வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசி நாள் : 30.4.2020

விபரங்களுக்கு: Click Here