Monday, December 3, 2018

மத்திய இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு

தொடர்புடைய படம்

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 703 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 703

கல்வித் தகுதி:- 10-வது தேர்ச்சி ,ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncrald.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி:ரூ.100 இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

அதிகாரப்பூர்வஅறிவிப்பு : Click Here 


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி க்கான பட முடிவு

மத்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.டெஸ்., பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.டெஸ்., எம்.எப்டெக்.,

தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவர்களாகவும், முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., /மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை சதவீதத்தில் இடஒதிக்கீடு வழங்கப்படும்.

வயது வரம்பு: இளநிலை படிப்பிற்கு 23 வயதிற்கு குறைந்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை என்.ஐ.எப்.டி.,யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பி.டெஸ்., படிப்பிற்கு கிரியேடிவிட்டி எபிலிட்டி டெஸ்ட் (சி.ஏ.டி.,), பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.எப்டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (ஜி.ஏ.டி.,), எம்.டெஸ்., படிப்பிற்கு சி.ஏ.டி., மற்றும் ஜி.ஏ.டி., ஆகிய இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளும் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 28

தேர்வு நாள்: ஜனவரி 20

விபரங்களுக்கு: Click Here

கூகுள் அறிவியல் போட்டி

தொடர்புடைய படம்

உலகம் முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு டிச.,12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

முக்கியத்துவம்: பள்ளி மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி.

சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம்.

பரிசுகள்: 
* உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்) அவர்களது உயர்கல்விக்கான உதவித்தொகையாகக் கூகுள் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

* லீகோ எஜூகேஷன் சார்பாக 15,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகவும், டென்மார்க்கில் உள்ள லீகோ நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பாக, ‘எக்ஸ்ப்ளோரர் அவார்ட்’, 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் களேபாகோஸ் தீவுகளுக்கு 15 நாட்கள் கல்வி சுற்றுலா.

* சயின்டிபிக் அமெரிக்கன் நிறுவனம் சார்பாக ‘இனோவேட்டர் அவார்ட்’ என்கிற விருது மற்றும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகை.

* சிறந்த தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு காலக்டிக் நிறுவனம் சார்பாக ‘பயனீர் அவார்ட்’ ஆக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* சிறந்த முறையில் தங்களது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியருக்கு, லீகோ நிறுவனத்தின் சார்பாக ‘இன்ஸ்பயிரிங் எஜூகேட்டர் அவார்ட்’ மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* உலக அளவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* மாநில அளவில் வெற்றி பெறும் 53 மாணவர்களுக்கு ‘ஆண்ட்ராய்ட் டேப்ளெட்’ மற்றும் இதர பரிசுகள். 100 ரீஜினல் வெற்றியாளர்களுக்குப் பரிசாக ‘குரோம்புக்’ மற்றும் இதர பரிசுகள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த போட்டிக்காக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு: Click Here