Tuesday, June 5, 2018

+1 JUNE 2018 RE EXAM REG | DIRECTOR INSTRUCTIONS

Image result for +1 re exam








பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Image result for பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு:

பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை முதல் ஆன் -லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: 

கடந்த மார்ச் -ஏப்ரல் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசித் தேதியாகும்.

தேர்வுக் கட்டணம்:

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50, இதர கட்டணம் ரூ. 35 ஆகியவற்றுடன் ஆன் -லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வு கால அட்டவணை: 

ஜூலை 5 - மொழிப் பாடம் தாள்-1, 
ஜூலை 6 - மொழிப் பாடம் தாள்-2, 
ஜூலை 7 - ஆங்கிலம் தாள்-1, 
ஜூலை 9- ஆங்கிலம் தாள்-2, 
ஜூலை 10 - வேதியியல், கணக்குப் பதிவியல், தொழில்பிரிவு கணக்குப் பதிவியல் தியரி, புவியியல், 
ஜூலை 11 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, செவிலியர் (தொழில்), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.
ஜூலை 12 - தகவல்தொடர்பு ஆங்கிலம், நன்னெறி, கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்
ஜூலை 13 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம், பொது இயந்திர தத்துவம்-1, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம்-1, மேலாண்மைத் தத்துவங்கள், மேலாண்மை தத்துவம் மற்றும் நுட்பங்கள் 
ஜூலை 14 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திர தத்துவம் -2, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம் -2, மின்னணுவியல் உபகரணங்கள், சிவில் வரைபட நிபுணர், ஆட்டோ மெக்கானிக், ஜவுளி தொழில்நுட்பம்.

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

Image result for தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் (வெள்ளிக்கிழமை) முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

இசைப்பள்ளி 

தூத்துக்குடியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் சேர்க்கை (வெள்ளிக்கிழமை) முதல் நடக்க உள்ளது. இந்த பள்ளியில் சேர்வதற்கு 12 வயதுக்கு மேல், 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதி செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.

வேலை வாய்ப்புகள் 

3 ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு... 

எனவே கலை ஆர்வமுள்ள மாணவ– மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, ‘தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி’ என்ற முகவரியிலும், 0461–2300605 மற்றும் 9443810926 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

City Union Bank Limited Recruitment 2018

Image result for City Union Bank Limited




Application Form: Click Here

South Central Railway Recruitment 2018

Image result for South Central Railway

Org Name
South Central Railway
Website
-----
Location
Telangana
Job Category
Central Govt
No. of Posts:
14 Vacancies
Name of  Posts

Group 'C'
Erstwhile Group 'D
Qualification
10th, 12th, ITI
Selection
Written Exam, Interview
Apply Mode
Offline
Starting Date
02.06.2018
Last Date
03.07.2018
Exam
Aug/sep  2018

Application Form: Click Here

Anna University Recruitment 2018 (40 Teaching Faculty Posts)

Image result for Anna University

Org Name
Anna University
Website
www.annauniv.edu
Location
Chennai
Job Category
Temporary Teaching
No. of Posts:
40 Vacancies
Name of  Posts
Teaching Faculty
Qualification

B.E/B.Tech, M.E/M.Tech,
M.Sc, MBA
Selection
Written Exam, Interview
Apply Mode
Offline
Starting Date
05.06.2018
Last Date
14.06.2018
Exam
jun,july  2018

Application Form: Click Here

SARA Academy Android Apps

வேலையில்லையா... சில யோசனைகள்!

Image result for வேலை

இன்று பலர் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. என்றோ.. அல்லது இந்த வேலை எனக்குத் தெரியாது, அந்த வேலை எனக்கு ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பின்மையைச் சமாளிக்கவும் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் சில சிறந்த வழிகள்

சுய உதவி பெறலாம்: 

நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது உங்கள் சுய மரியாதையைப் பாதிப்பதோடு அது தன்நம்பிக்கையை குறைக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உரிய நபர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெறுவதோடு, உள்ளூர் நூலகம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். 

வேலைக்கான உதவியைப் பெறுங்கள்:

தற்போதைய தேடல் வெற்றியடையவில்லை என்றால் புதிய வாய்ப்புகளுக்கு பொருத்தமாக உங்கள் விண்ணப்பத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு தகுதியை, தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். 

பிற வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: 

உங்கள் முந்தைய வேலையின் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் வேறு ஒரு வேலையை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். எனினும் பகுதி நேர வேலை மற்றும் சில ஒப்பந்தப் பணிகளைச் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் உங்கள் தொலைபேசிக் கட்டணம், புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியும். 

விரும்பிய நிறுவனத்தை நோக்கிச் செல்லுங்கள்:

ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மீது உங்களுக்கு ஆர்வமோ, அல்லது பெரும் மதிப்போ இருக்குமானால் அந்த நிறுவனத்தில் கடைநிலைப் பணியானாலும் ஏற்றுக் கொண்டு நிறுவனத்தோடு உங்களை இணைத்துக் கொள்வது நல்லது. பின்னர் உங்கள் திறமையை, நேர்மையைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் உயர் பதவியை அடையும் வாய்ப்பை உருவாக்கலாம். 

நேர்காணலுக்கான திறன்களை வளர்த்தல்: 

நேர்காணலின் போது உங்களுக்கு அதிக நம்பிக்கை, தைரியம் தேவைப்படலாம் அல்லது ஒரு நிர்வாக உதவியாளராக சிறந்த தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படலாம். இணைய தளம் மற்றும் உள்ளூர் பயிற்சி மையங்கள் இதற்கான வகுப்புகளை நடத்துகின்றன. அதன்மூலம் திறனை வளர்த்துக் கொண்டு தகுந்த வேலையை அமைத்துக் கொள்ளுங்கள். 

வேலை என்பது ஊதியத்துக்கானது மட்டுமல்ல. நம்மை நமக்கும் பிறருக்கும் அடையாளப்படுத்துவதும் ஆகும்.

ஜூலை கடைசி வாரத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியீடு

Image result for tnpsc

கடந்த ஆண்டு அக்டோர் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற 85 காலியிடங்களுக்கான குரூப் I மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்திலும், கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற 9351 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற தோராய கால அட்டவணையினை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியாகும்.

நீட் தேர்வு கட் ஆப் விவரம் ...!!

Job Fair TN-Model Career Center District Employment Exchange At Vellore

Image result for Job Fair

Job Fair Name:

JF-TN-Model Career Center District Employment Exchange Job Fair

Job Fair Description:

ALL TYPE OF PRIVATE JOB

Name of the Post:

Multiple Posts

Qualification:

10th, Any Degree

Fresher can also participate in this job fair

No. of Participated Job Seekers:

03 Job Seekers

Important Date:

Registration Date/Time: 01/06/2018 3:00 PM to 07/06/2018 12:00 AM

Job Fair Start Date/Time: Jun 8th 9:00 AM 3:00 PM

Job fair Venue:

Model Career Center District Employment ExchangeBuilding vellore,
Vellore, Tamil Nadu.

How to attend Job Fair:

Eligible Candidates can attend the Job Fair along with your Bio data, id proof, Passport size Photo on the particular date.

Job Fair Link -> https://www.ncs.gov.in

TN-Private Job Fair in The Nilgiris at 08/06/2018

Image result for Job Fair

Job Fair Name: 

JF-TN-Private Job Fair

Job Fair Description:

PRIVATE JOB FAIR

Name of the Post:

Multiple Posts

Qualification:

10th, Any Degree

Fresher can also participate in this job fair

Important Date:

Registration Date/Time: 04/06/2018 10:04 AM to 07/06/2018 10:04 AM

Start Date/Time: 08/06/2018 10:04 AM 4:16 PM

Job fair Venue:

TEA PLANTATION I.T.I., 
NEAR MORNING STAR SCHOOL, 
GUDALUR, THE NILGIRIS,
Tamil Nadu.

How to attend TN-Private Job Fair in The Nilgiris:

Eligible Candidates can attend the Job Fair along with your Bio data, id proof, Passport size Photo on the particular date.