Friday, June 8, 2018

தூய்மையை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24ல் மாரத்தான் ஓட்டம்

Image result for மாரத்தான் ஓட்டம்

சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் ஜூன் 24ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஜியோ பவுண்டேஷன் நிறுவனர் பிரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை நகரில் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ‘நம்ம ஊரு ரொம்ப கிளீன்’ என்ற பெயரில் அம்பத்தூர் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மை செய்யும் பணிகளை தொடர்கிறோம். பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனைகளையும் தூய்மை செய்ய உள்ளோம். 

மரக்கன்றுகளையும் நடுவோம். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ பவுண்டேஷன் சார்பில் சென்னையில் ஜூன் 24ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறும். பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளியில் காலை 5.30 மணிக்கு தொடங்கி 10கிமீ தொலைவுக்கு இந்த பந்தயம் நடைபெறும். பங்கேற்க விரும்புவோர் தலா ரூ.500 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த மாரத்தான் ஓட்டம் முன்னோட்டம் தான். வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கொட்டிவாக்கத்தில் உள்ள ஓஎம்ஆர்-ஓய்எம்சிஏ திடலில் அரை மாரத்தான் (10 கி.மீ) நடைபெறும். அதுவரை எங்கள் தூய்மை பணிகள் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் நடைபெறும்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஜூன் 16 கடைசி நாள்

Image result for நெய்வேலி புத்தகக் கண்காட்சி

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21 -ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூன் 29 முதல் ஜூலை 8 -ஆம் தேதி வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சியையொட்டி மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை, சிறுகதைப் போட்டிகள், இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்தும் திரளானோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 21 -ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி கட்டுரை, சிறுகதை, குறும்படப் போட்டிகளுக்கு சில நிபந்தனைகளுக்குள் பட்டு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைப் போட்டி:

பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்: 
  • விழுவதெல்லாம் எழுவதற்கே, 
  • அகத் தூய்மையே பெருந்தூய்மை, 
  • நல் உரைகளே நல்ல உரைகல்
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்: 
  • வேதனை சாதனை ஆவதே போதனை, 
  • வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள், 
  • தேசம் என் சுவாசம்.
மேற்கண்ட தலைப்புகளில் கீழ்காணும் விதிகளுக்குள்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல், தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவர் என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.

பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும். தகவல் தெரிவிக்க வசதியாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும். முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.1,500, 3-ஆம் பரிசு ரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500 வழங்கப்படும். நெய்வேலி மாணவர்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500 வழங்கப்படும்.

குறும்படப் போட்டி: 

தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின்போது வழங்கப்படும். போட்டி முடிவுகள் ஜூன் 3-ஆவது வாரம் வெளியிடப்படும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா ரூ.2,000, நடுவர் குழுவின் பரிசுகள்( 5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா ரூ.1,000 வழங்கப்படும்.

சிறுகதைப் போட்டி: 

தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக சிறுகதைகள் இருத்தல் வேண்டும். இவை தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் ஏற்கெனவே பிரசுரமாகாதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழியும் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கதைகள் வெள்ளைத் தாளில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் ஜூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு 5 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.2,500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250 வழங்கப்படும்.

கட்டுரைகள், குறும்படங்கள், சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: 

செயலர், 
நெய்வேலி புத்தகக் கண்காட்சி, 
செயல் இயக்குநர்/மனிதவளம், 
மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், 
என்எல்சி இந்தியா லிமிடெட், 
வட்டம்-2, நெய்வேலி-607 801, 
கடலூர் மாவட்டம். 

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.6.2018.

Book Fair Link click here

புதுவை பல்கலை. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு


புதுவை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு முதுநிலைப் படிப்புகள், 5 ஆண்டுகள் பட்டப் படிப்புகள், முனைவர் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 26, 27, 28 -ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மையங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை 43 ஆயிரத்து 609 பேர் எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in -இல் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், மாணவர் சேர்க்கை தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அதே இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.

ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for ஜிப்மர்


புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் http://www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

இளந்தமிழ் ஆய்வாளர் விருது – 2018 தகுதி உடையவருக்கு அழைப்பு

8 ஆம் வகுப்பு pass/fail &10 th pass &fail மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் படிப்பு






தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச IAS அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

Image result for இலவச IAS அகாடமி

தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய அவர்இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என்றார். பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்