Sunday, August 26, 2018

குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு காப்புரிமை கழகத்தில் வேலைவாய்ப்புகள்!


மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறை நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரை கழகத்தில் நிரப்பப்பட உள்ள 200 Examiner of Patents & Designs பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Examiner of Patents & Designs 

காலியிடங்கள்: 220

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 04.09.2018 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: Bio-chemistry, Chemistry, Polimer Science போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் Polymer Engineering/Technology, Electrical Engineering, Bio-Medical Engineering, Computer Science, Information Technology, Electronics & Telecommunication Engineering, Metallurgical Engineering/Technology போன்ற பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 30,09.2018
தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, சென்னை, ஹாதராபாத்

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cgpdtmrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

விவரங்கள் அறிய CLICK HERE 

தமிழக அரசில் வேலை இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!


தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 48 (மாறுதலுக்குட்பட்டது)

தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பத்தாரர்கள் கல்வி பயின்ற பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
21.08.2018 தேதி அறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: பணி நியமனத்திற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதார்கள் தரத்தில் உடற்தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், அரசு விதிகளின்படி முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற வகையினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் "The Secretary, TNCWWB" என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப.த்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
செயலாளர், 
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
 நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2018

 விவரங்கள் அறிய Click Here 

தொலைத்தொடர்பு துறையில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி வேலை


தொலைத்தொடர்பு துறையின் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர், இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Director - 11
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

பணி: Junior Telecom Officer - 02

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Office of Sr. DDG, 
Gujarat LSA, Department of Telecom,
1st floor, 
P&T Admin Building, 
Khanpur, Ahmedabad – 380001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.10.2018

விவரங்கள் அறிய CLICK HERE.

நர்சிங், பார்மசி முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

நர்சிங், பார்மசி க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான எஸ்எஸ்பி என அழைக்கப்படும் சாஸ்திரா சீமா பல் (Sashastra Seema Bal) படைப்பிரிவில் காலியாக உள்ள 181 சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்தம் காலியிடங்கள்: 181 

காலியிடங்கள் விவரம்: 
1. நர்சிங் படித்த பெண்கள் - 23 (சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்)
2. பார்மசிஸ்ட் - 18 (உதவி சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது)
3. ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன் - 02 
4. டென்டல் டெக்னீசியன் - 02 
5. ரேடியோகிராபர் - 08 
6. ஸ்டெனோகிராபர் - 54
7. ஹெட்கான்ஸ்டபிள் - 74 

தகுதி: பிளஸ்-2 படிப்புடன் ஜெனரல் நர்சிங், பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், டென்டல் ஹைஜீனிஸ்ட், ரேடியோ டயக்னாஸிஸ் டிப்ளமோ, ஸ்டெனோகிராபர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 09.09.2018 தேதியின்படி ஒவ்வொரு பிரிவு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2018

விவரங்கள் அறிய Click Here