Sunday, September 9, 2018

BHEL Trichy Recruitment 2018 (529 Apprentices Posts)

bhel' க்கான பட முடிவு

Organization Name
Bharat Heavy Electricals Limited (BHEL Trichy)

Employment Category
 Central Govt Apprentices Training 

Total No. of Vacancies
529

Job Location
 Trichy

Educational Qualification
10th., ITI

Selection Procedure 
 Merit List, Interview

Important Dates 
1. Online Application Opening Date 29.08.2018
2. Online Application Closing Date 13.09.2018
3. Publication Of Shortlisted Candidates List (For Certificate Verification) - 17/09/2018
4. Expected Certification Verification Period 24.09.2018
5. Onwards Publication Of Final Selection List 09.10.2018
6. Tentative Joining Date 15.10.2018

 Online Application & Official Notification Links:
 Notification English PDF
Notification Tamil PDF
 Online Application Form

TNPSC COMBINED ENGINEERING SERVICE RESULT PUBLISHED

COMBINED ENGINEERING SERVICE RESULT PUBLIS க்கான பட முடிவு

RESULT

Click Here

பொறியியல் பணிக்கு 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம்

ஒருங்கிணைந்த பொறியியல் காலி பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வரும் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. அதில் 44 ஆயிரத்து 524 தேர்வர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றோரில் 665 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12 முதல் 25-ஆம் தேதி வரை மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தொடர்புடைய படம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் 4 -இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 27 -ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை வரும் 18 -ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகளிடம், மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லையெனில், அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதனுடன் அவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக்கடிதத்தையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் அல்லது கலந்தாய்வின்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க தவறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  அவர்கள் அடுத்தகட்ட தெரிவுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044-2530 0336, 044-2530 0337 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை

hindusian ship க்கான பட முடிவு

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Manager (Finance)
காலியிடங்கள்: 05
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assoistant Manager (HR)
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று, தொழிலாளர்கள் அல்லது சமூக சேவை துறைகளில் முதுகலை டிப்ளமோ அல்லது மனிதவள மேலாண்மை துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.ரூ.16,400 - 40,500

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.10.2018

 விவரங்கள் அறிய Click Here 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாராமெடிக்கல் வேலை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Dietician - 02
பதவி: SpeechTherapist - 01
பதவி: Supervisor Lanundry - 01
பதவி: Bio-Medical Engineer - 01
பதவி: Data Processing Assistant - 04
பதவி: Boiler Attendant - 03
பதவி: Orthodontic Technician - 01
பதவி: Pharmacist - 09
பதவி: Uro Technician - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018

எழுத்துத்த தேர்வு நடைபெறும் இடம்: சென்னை மற்றும் புதுச்சேரி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2018

விவரங்கள் அறிய Click Here

பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை


இந்திய அஞ்சல் துறையின் சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நேரடி முறையில் நிரப்பப்பட உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் (Postal Insurance Direct Agent)

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் (முகவர்கள்), ஓய்வு பெற்ற மத்திய, மாநில ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கல்வி சான்றிதழ், பிறந்த தேதிக்கு சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் (சமீபத்தியது) நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.09.2018 அன்று காலை 11 மணி முதல் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை - 600001

மேலும் விவரங்கள் அறிய 044 - 25244338 என்ற தொலைப்பேசி எண்ணில் வேலை நேரங்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செப். 18 முதல் செய்முறைத் தேர்வு

தொடர்புடைய படம்

த்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு செப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்தி: செப். 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கெனவே நடந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், புதிய தேர்வர்கள் என அனைவரும், இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலை.யில் பட்ட சான்றிதழ் பெறாதோருக்கு சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக க்கான பட முடிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக (1991-2017) சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் தேர்வுத் துறை சார்பில் நடைபெற உள்ளது. வருகிற 28 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சான்றிதழைப் பெற வரும் மாணவர்கள் தங்களின் ஏதேனும் ஓர் புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி, அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு பல்கலைக்கழகத் தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் அல்லது பல்கலைக்கழக கல்வி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.