Saturday, October 19, 2019

தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!

co-optex க்கான பட முடிவு

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள 27 கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 27 
பணியிடம்: தஞ்சாவூர் 

பணி: கணினி இயக்குனர் - 01 
பணி: வடிவமைப்பாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.5,800 - ரூ.32,970 + ரூ.1,500 

பணி: இளநிலை எழுத்தர் - 08 
பணி: விற்பனையாளர் நிலை II - 15 
சம்பளம்: மாதம் ரூ.4,900 - ரூ.27,800 + ரூ.1,200

பணி: அலுவலக உதவியாளர் - 02 
சம்பளம்: மாதம் ரூ.4,000 -ரூ.19,360 + ரூ.900 

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாகளிக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 10 ஆண்டுகள் கூடுதலாக சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவது போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://cooptex.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31.10.2019

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை


அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 327 விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 327

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientist/Engineer - SC (Electronics) - 131
பணி: Scientist/Engineer -SC (Mechanical) - 135
பணி: Scientist/Engineer-SC (Computer Science) - 58
பணி: Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளை பயன்படுத்து ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர்கள் மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019A

விவரங்கள் அறிய CLICK HERE

இளைஞர்களுக்கான புதிய வங்கி வேலைவாய்ப்பு: சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 67

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01 
பணி: MANAGER (BUILDER RELATIONS) - 02 
பணி: MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
பணி: MANAGER (RISK MGMT-IBG) - 02
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
பணி: SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01 
பணி: EXECUTIVE (FI & MM) - 21 
பணி: SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08 
பணி: MANAGER (ANYTIME CHANNELS) - 01
பணி: MANAGER (ANALYST-FI) - 03
பணி: Dy. MANAGER (AGRI-SPL.) - 05
பணி: MANAGER ANALYST - 07
பணி: SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2019 

விவரங்கள் அறிய CLICK HERE

எல்லை சாலை கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 778 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver Mechanical Transport (Ordinary Grade) - 388
பணி: Electrician - 101
பணி: VEHICLE MECHANIC - 92
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Skilled Worker (Cook) -197
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,900 - 39,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பபட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகளை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

விவரங்கள் அறிய   Click Here

என்எம்எம்எஸ் தேர்வு: அக்.21 முதல் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய உத்தரவு


என் எம் எம் எஸ் உதவித்தொகை க்கான பட முடிவு

என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

அதன்படி, நிகழாண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.