Saturday, August 3, 2019

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 25 நகரங்களில்  குரூப்-4 பணிகளுக்கான இலவச மாதிரி தேர்வு

தொடர்புடைய படம்

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழகத்தில் 25 நகரங்களில் ஆக. 25-ல் நடைபெறும் குரூப்-4 மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட அரசுப் பணி களில் உள்ள 6,491 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 தேர்வு வரும் செப். 1-ம் தேதி நடை பெறவுள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு சென்னை (அண்ணாநகர், அடையாறு), காஞ் சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, நாகப்பட் டினம், மதுரை, விருதுநகர், திரு நெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 25 நகரங்களில் வரும் ஆக.25-ம் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்வை எழுதி பயன்பெற விரும்புவோர் www.shankariasacademy.com, www.tnpscthervupettagam.com என்ற இணையதளங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 766677 66266, 044-43533445, 45543082 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

பொறியியல் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: கருத்துருக்களை வரவேற்றுள்ளது ஏஐசிடிஇ


நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று கருத்துருக்களை அனுப்பலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும், புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பொறியியல் மாணவர்களுக்கான இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் (டிஎஸ்டி) டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் கருத்துருக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவியையும், பெங்களூரு ஐஐஎம் வழிகாட்டுதலையும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ரூ. 4.94 கோடி நிதியுதவியையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கருத்துருக்களை http://innovate.mygov.in/iide2019 என்ற வலைதளம் மூலம் அனுப்பலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,760 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 26,511 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று 10,146 கருத்துருக்களை அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

APPLY  LINK

பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் விருது: செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி ஆசிரியர் க்கான பட முடிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

இந்த விருதைப் பெற தகுதி உள்ளவர்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரி மூலமாக வரும் செப். 15-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.