Monday, November 26, 2018

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் க்கான பட முடிவு


தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக என்.ஏ.ஆர்.ஐ. என அழைக்கப்படுகிறது. புனேயில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. டிப்ளமோ நர்சிங் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.300க்கு டி.டி. எடுத்து இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. நேர்காணலின் போது எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் நடத்தப்படுகிறது. 30-11-2018 மற்றும் 4-12-2018 ஆகிய தேதிகளில் இதற்கான தேர்வுமுறைகள் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://www.nari-icmr.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் விருது க்கான பட முடிவு

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆடை உற்பத்தி இலவச பயிற்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தொடர்புடைய படம்

தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, பெரம்பலுார், கடலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உட்பட, 23 மாவட்டங்களைச்சேர்ந்த, 2,500 இளைஞர்களை தேர்வு செய்து, ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்க, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரியில், 2 மையம்; அம்மாபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தலா ஒன்று; மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என, மொத்தம், ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிச., மாதம் முதல், பயிற்சி துவங்குகிறது.

ஓவன் ஆடை உற்பத்தி டெய்லர், பின்னலாடை டெய்லர், செக்கிங், உற்பத்தி மேற்பார்வையாளர், மெர்ச்சன்டைசர், பேஷன் டிசைனர், தர கட்டுப்பாடு நிர்வாகி என, ஏழுவகை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இது குறித்து, நிப்ட்-- டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:கிராமப்புற இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஏழுவகை பயிற்சிகள் உள்ளன; இளைஞர்கள், கல்வித்தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இரண்டு ஆண்டுகளில், 2500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; முதல்கட்டமாக, 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.இத்திட்டத்தில், 4 முதல் 5 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும் தங்குமிடம், உணவு இலவசம். போக்குவரத்து செலவும் திரும்ப வழங்கப்படும்.டெய்லர், செக்கிங் பயிற்சிக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். பேஷன் டிசைனருக்கு, பிளஸ்2 படித்திருக்க வேண்டும். 

பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்தாலோ அல்லது, நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாக இருந்தால், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், இணைய விருப்பம் உள்ளோர், 97914 83111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

Tirunelveli Aavin milk Recruitment for Technician, Driver Job Posts

தொடர்புடைய படம்

Org Name
 Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd

Qualification
 8th,12th, Post graduate degree

Job Location
 Tirunelveli

Name of the Post 
Technician, Driver Post

Apply Mode
Postal

Address
“The General Manager , 
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., 
Reddiarpatty Road, 
Perumalpuram Post, Tirunelveli – 627 007”

Last date
 12/12/2018

Official Notification of Aavin Milk website
↓ 


TNPSC Recruitment 2018 41 AE (Industries) Posts

தொடர்புடைய படம்

Organization Name
Tamil Nadu Public Service Commission

Job Category 
Tamilnadu Govt Jobs

No. of Posts
41 Vacancies

Name of the Posts
Assistant Engineer (Industries), Principal & Various Posts

Qualification
BE.,B-TECH

Selection Procedure 
Written Examination, Interview

Apply Mode 
Online

Official Website 

Starting Date 
26.11.2018

Last Date 
24.12.2018

Online Application & Official Notification Links
Official Website Career Page 
 Notification PDF 
Online Application Form