Sunday, May 27, 2018

Central University of Tamil Nadu (CUTN) Recruitment 2018

Image result for Central University of Tamil Nadu

Org Name: Central University of Tamil Nadu (CUTN)

Category: Central Govt Jobs

Vacancies: 43

Location: Thiruvarur

Name of the Post: various  

Qualification: 10th, 12th, ITI, Any Degree

Selection Procedure : Written Exam, Interview

Last date for Submission of Application: 20.06.2018

Official Notification & Application:
Website Page: Click Here
Notification : Click Here to Download
Application Form: Click Here to Download

Indian Navy Recruitment 2018

Related image

Org Name: Indian Navy

Category: Central Govt 

Vacancies: Various

Location: All over India

Name of the Post : Cadet Entry Scheme

Qualification: 12th

Last date for Submission of Application: 21.06.2018

Indian Navy Application & Official Notification:
Website Page: Click Here
Notification: Click Here toDownload
Application Form: Click Here to Apply

25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை

Image result for 25 சதவீத இட ஒதுக்கீடு:

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏழை, நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க பெற்றோருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு சேர்க்கைக்காக ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து அந்த விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. அப்போது தகுதி இல்லாத, போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு தகுதியுடைய குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் அதற்கான சேர்க்கை உடனடியாக வழங்கப்படும். மாறாக, பள்ளியில் உள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதாரணமாக ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் அதில் 25 இடங்கள் இலவச சேர்க்கையின் கீழ் வரும். அந்தப் பள்ளியில் நுழைவு நிலை வகுப்பில் சேர 25 குழந்தைகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு அன்றைய தினமே சேர்க்கை வழங்கப்படும். மாறாக அதை விடக் கூடுதலான அளவில் விண்ணப்பித்திருந்தால் அந்தந்த பள்ளிகளில் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது:- கடந்த 2013-ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு 90,607-ஆக உயர்ந்துள்ளது. ஒரு குழந்தைக்கான சேர்க்கைக்கு அதிகபட்சம் 5 பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம் என்பதால் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை அந்தந்த பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் திங்கள்கிழமை அன்றே ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

பத்தாம் வகுப்பு: இன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Image result for தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமையன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

மதிப்பெண் சான்றிதழ்: 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஜூன் 28-இல் துணைத் தேர்வு: 

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28 முதல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது


தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா? தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா? (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது www.findteacherpost.com 

Email: contact@findteacherpost.com |

30ம் தேதி பிளஸ் 1, 'ரிசல்ட்'

Image result for 30ம் தேதி பிளஸ் 1, 'ரிசல்ட்'

அரசு தேர்வுத்துறை, ஓராண்டுக்கு முன் அறிவித்தபடி, நாளை மறுநாள், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பிளஸ் 1 தேர்வின் முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு, பள்ளி துவங்கும் நாளிலேயே, பொது தேர்வுகள் நடக்கும் தேதியும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. 

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகளும், அறிவித்தது போல், 30ம் தேதி வெளியாகின்றன. மாணவர்கள் பதிவு செய்துள்ள, மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண்கள் வரும். ஜூன், 1க்கு பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு அனுப்பப்படுவர். பிளஸ் 2 படித்தபடியே, பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

Heavy Water Board (HWB) Recruitment 2018

Related image

Org Name: Heavy Water Board (HWB)

Category: Central Govt 

Vacancies: 226

Location: Across India

Name of the Post: various

Qualification:10th, ITI, Diploma, Any Degree

Selection Procedure:
  • Written Examination, 
  • Skill Test, Level 1 & 2 Test, 
  • Interview.
Application Fee:
General/OBC - Rs.100/-
(ST/SC/Ex-s/PWD)- Nil

Last date for Submission of Application: 25.06.2018

HWB Online Application & Official Notification:
Website Page: Click Here
Notification: Click Here to Download
Application: Click Here to Apply