Sunday, November 17, 2019

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை


இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: Mining 
காலியிடங்கள்: 16

பயிற்சியின் பெயர்: Electrical
காலியிடங்கள்: 11

பயிற்சியின் பெயர்: Metallurgy
காலியிடங்கள்: 02

பயிற்சியின் பெயர்: Chemical
காலியிடங்கள்: 02

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Mechanical
காலியிடங்கள்: 10 
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மைனிங் மெஷினரி பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Civil
காலியிடங்கள்: 04 
தகுதி: பொறியியல் துறையில் civil, Architecture பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2019

விவரங்கள் அறிய CLICK HERE

வடமேற்கு ரயில்வேயில் 2029 காலியிடங்களுக்கு அழைப்பு


இந்திய அரசின் வடமேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 2029 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 2029

வயதுவரம்பு: 08.12.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஐடிஐ தொழிற்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

 விவரங்கள் அறிய CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2019

ஆராய்ச்சி மாணவா்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு


எஸ்.சி. ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான ஆராய்ச்சி கல்வி உதவித் தொகையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

படிப்பில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவா்கள், ஏழை மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல, தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெறும் ஆராய்ச்சி பட்ட மாணவா்களுக்கும் ஆராய்ச்சி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி உதவித் தொகையை மத்திய அரசு இப்போது உயா்த்தியுள்ளது.

அதன்படி, எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையும், மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 என்ற அளவிலிருந்து ரூ. 31,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 ஆக வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ. 35,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 19, 2019

தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!

co-optex க்கான பட முடிவு

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள 27 கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 27 
பணியிடம்: தஞ்சாவூர் 

பணி: கணினி இயக்குனர் - 01 
பணி: வடிவமைப்பாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.5,800 - ரூ.32,970 + ரூ.1,500 

பணி: இளநிலை எழுத்தர் - 08 
பணி: விற்பனையாளர் நிலை II - 15 
சம்பளம்: மாதம் ரூ.4,900 - ரூ.27,800 + ரூ.1,200

பணி: அலுவலக உதவியாளர் - 02 
சம்பளம்: மாதம் ரூ.4,000 -ரூ.19,360 + ரூ.900 

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாகளிக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 10 ஆண்டுகள் கூடுதலாக சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவது போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://cooptex.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31.10.2019

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை


அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 327 விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 327

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientist/Engineer - SC (Electronics) - 131
பணி: Scientist/Engineer -SC (Mechanical) - 135
பணி: Scientist/Engineer-SC (Computer Science) - 58
பணி: Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளை பயன்படுத்து ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர்கள் மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019A

விவரங்கள் அறிய CLICK HERE

இளைஞர்களுக்கான புதிய வங்கி வேலைவாய்ப்பு: சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 67

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01 
பணி: MANAGER (BUILDER RELATIONS) - 02 
பணி: MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
பணி: MANAGER (RISK MGMT-IBG) - 02
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
பணி: SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01 
பணி: EXECUTIVE (FI & MM) - 21 
பணி: SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08 
பணி: MANAGER (ANYTIME CHANNELS) - 01
பணி: MANAGER (ANALYST-FI) - 03
பணி: Dy. MANAGER (AGRI-SPL.) - 05
பணி: MANAGER ANALYST - 07
பணி: SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2019 

விவரங்கள் அறிய CLICK HERE

எல்லை சாலை கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 778 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver Mechanical Transport (Ordinary Grade) - 388
பணி: Electrician - 101
பணி: VEHICLE MECHANIC - 92
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Skilled Worker (Cook) -197
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,900 - 39,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பபட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகளை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

விவரங்கள் அறிய   Click Here

என்எம்எம்எஸ் தேர்வு: அக்.21 முதல் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய உத்தரவு


என் எம் எம் எஸ் உதவித்தொகை க்கான பட முடிவு

என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

அதன்படி, நிகழாண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, September 21, 2019

ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறறது.

இது குறித்து பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மா.பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இங்கு 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறறது. 

யு.பி.எஸ்.சி.யால் வரும் 31.5.2020 அன்று நடத்தப்பட உள்ள ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தோ்வுக்கான முழு நேர இலவசப் பயிற்சி வரும் டிசம்பா் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மையத்தில் தோ்வுக்கான இலவசப் பயிற்சி, தங்கும் இடம், நூலக வசதி, இணையதள வசதி, மாதம் ரூ.2 ஆயிரம் உணவுப்படி ஆகியவை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவுத் தோ்வு நவம்பா் 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தோ்வு யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தோ்வின் அடிப்படையில் நடைபெறும். நுழைவுத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, வரும் அக்டோபா் 15 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளா் - பயிற்சி இயக்குநா், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 46 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளார்

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் வெளியீடு

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட இளநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.a

Saturday, August 17, 2019

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை


தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 96

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்

பயிற்சி: Apprentices

துறைவாரியான காலியிடங்கள்: 
I. Graduate Apprentices - 34
1. Mechanical Engineering - 21 
2. Automobile Engineering - 13 

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

II. Technician (Diploma) Apprentices - 34
1. Mechanical Engineering - 21 
2. Automobile Engineering - 13 
3. Civil Engineering - 04 
4. Electrical and Electronics Engineering - 04 

பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019

விவரங்கள் அறிய  Click Here

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 130 +108 = 238

வயதுவரம்பு: 

01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி: 

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. கட்டணத்தை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகலில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.

 விவரங்கள் அறிய 
http://www.kpmdrb.in/doc_pdf/Notification_1.pdf


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை



ஆந்திர வங்கியில் நிரப்பப்பட உள்ள துணை ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Sub Staff

காலியிடங்கள்: 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 3 முதல் 9 ஆண்டு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2019

விவரங்கள் அறிய Click Here

Saturday, August 10, 2019

தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை


தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Sport Persons (Groups-C)

காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 

01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் Secunderabad-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட Bank Draft , IPO ஆக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.scr.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்திற்கான டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Senior Personnel Officer (Engg. & Rectt),
Room No.412, Office of the Principal Chief Personnel Officer, 
4th Floor, Rail Nilayam, 
Secunderabad - 500 025 (Telangana).

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.08.2019

விவரங்கள் அறிய Click Here

வருமான வரித் துறையில் வேலை விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!




வருமான வரித் துறையில் காலியாக உள்ள 20 வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும், திறமையான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Tax Assistant - 02 

தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றிருப்பதுடன் 
ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 

09.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 18

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 

09.09.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டுத் தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

பேராசிரியர் வேலை அழைக்கிறது தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி க்கான பட முடிவு

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள 179 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Professor 

காலியிடங்கள்: 179

தகுதி: 

சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 

40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar,
2nd Floor, Head Office, 
NIFT Campus, Hauz khas, 
Near Gulmohar Park, 
New Delhi - 110016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2019

விவரங்கள் அறிய Click Here

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை க்கான பட முடிவு

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

நிகழாண்டில் (2019-2020) தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மாணவ, மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம். 

ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 

இணைய தளத்தில் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்வது அவசியம். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது.

மாணவ, மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை, சான்று, ஆவணங்களுடன் பரிசீலித்து, தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு க்கான பட முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாளை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Sunday, August 4, 2019

POSTAL EXAM 2019 | ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய படம்

அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த மாதம் 11-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இனி அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் அவசர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கி யது. ஆனால், தேர்வு முடிவுகளை வௌியிட தடை விதித்தது. இதையடுத்து, அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது. இந்நிலை யில் அரசியல் கட்சிகளின் எதிர்ப் பால் மத்திய அரசு இத்தேர்வை ரத்து செய்தது. மறுதேர்வு உள் ளூர் மொழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், தபால்காரர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் செப்.15-ம் தேதி தேர்வு நடைபெறும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இத்தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர உள்ளூர் மொழிகளில் கேள்வித்தாள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 3, 2019

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 25 நகரங்களில்  குரூப்-4 பணிகளுக்கான இலவச மாதிரி தேர்வு

தொடர்புடைய படம்

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழகத்தில் 25 நகரங்களில் ஆக. 25-ல் நடைபெறும் குரூப்-4 மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட அரசுப் பணி களில் உள்ள 6,491 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 தேர்வு வரும் செப். 1-ம் தேதி நடை பெறவுள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு சென்னை (அண்ணாநகர், அடையாறு), காஞ் சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, நாகப்பட் டினம், மதுரை, விருதுநகர், திரு நெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 25 நகரங்களில் வரும் ஆக.25-ம் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்வை எழுதி பயன்பெற விரும்புவோர் www.shankariasacademy.com, www.tnpscthervupettagam.com என்ற இணையதளங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 766677 66266, 044-43533445, 45543082 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

பொறியியல் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: கருத்துருக்களை வரவேற்றுள்ளது ஏஐசிடிஇ


நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று கருத்துருக்களை அனுப்பலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும், புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பொறியியல் மாணவர்களுக்கான இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் (டிஎஸ்டி) டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் கருத்துருக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவியையும், பெங்களூரு ஐஐஎம் வழிகாட்டுதலையும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ரூ. 4.94 கோடி நிதியுதவியையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கருத்துருக்களை http://innovate.mygov.in/iide2019 என்ற வலைதளம் மூலம் அனுப்பலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,760 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 26,511 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று 10,146 கருத்துருக்களை அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

APPLY  LINK

பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் விருது: செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி ஆசிரியர் க்கான பட முடிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

இந்த விருதைப் பெற தகுதி உள்ளவர்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரி மூலமாக வரும் செப். 15-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tuesday, July 30, 2019

தமிழக அரசில் உதவி சுற்றுலா அதிகாரி வேலை

சுற்றுலா அதிகாரி வேலை க்கான பட முடிவு

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி சுற்றுலா அதிகாரி 

காலியிடங்கள்: 42

தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது. 

கட்டணம்: விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். 

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்தில் இருந்து 300 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கொள்குறி வகையில் இடம்பெற்றிருக்கும். 

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2019

விவரங்கள் அறிய Click Here

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர்க்கை: விண்ணப்பிக்க செப்.30 கடைசி

தொடர்புடைய படம்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சேருவதற்கான தேர்வு, சென்னையில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மட்டும் 2020-ஆம் ஆண்டு ஏப். 7-இல் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு போன்றவற்றை கமாண்டன்ட், ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் - 248003 என்ற முகவரிக்கு, விரைவு தபால் வழியே உரிய விண்ணப்ப கட்டணத்தை அனுப்பி பெறலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கப்படாது. தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, நகல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2020-ஆம் ஜூலை 1-ஆம் தேதியன்று 11 ஆண்டு ஆறு மாதம் வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் 2.7.2007-க்கு முன்னதாகவும் 1.1.2009-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பிலிருந்து எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அதாவது 1.7.2020-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி (www.rimc.gov.in ) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர சி-டெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
அதன்படி நிகழாண்டுக்கான சி-டெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 8- ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 21 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். 

நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள்.  இந்தத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26-ஆம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. 

இந்நிலையில், நடந்து முடிந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையத்தில் பார்க்கலாம். இதேபோன்று தேர்வர்கள் தங்கள் சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில், டிஜிலாக்கர் அக்கவுண்டில் பெற்றுக்கொள்ளலாம். இந்த சி-டெட் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 27, 2019

மத்திய அரசில் காத்திருக்கும் 9 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள்..விண்ணப்பிக்கலாம் வாங்க!

தொடர்புடைய படம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பீகார் தொழில்நுட்ப சேவை ஆணையத்தில் செவிலியர் மற்றும் டியூட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நர்ஸ் பணிக்கு 9130 பேரும் ட்யூட்டர் பணிக்கு 169 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 9299 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஜி.என்.எம். எனப்படும் பேறுகால மருத்துவத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்பை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

டியூட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். ஆண்களுக்கு அதிகபட்சமாக 37 வயது வரை இருக்கலாம். பெண்கள் அதிகபட்சமாக 40 வயது ஆகியிருக்கலாம்.

எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப்பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.200.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : ஆகஸ்ட் 26, 2019

 ஆன்லைனில் விண்ணப்பிக்க

உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் க்கான பட முடிவு

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு கால உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. அதில் சேருவதற்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வரும் 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் , கம்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் வேலை


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 573 கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 1 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

மொத்த காலியிடங்கள்: 573

பணி: Computer Operator
காலியிடங்கள்: 76
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: Computer Scice, Computer Application பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Computer Application -இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Typist
காலியிடங்கள்: 229
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Office Automation -இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2019

விவரங்கள் அறிய  Click Here

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பழகுநர் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு!

என்எல்சி இந்தியா க்கான பட முடிவு

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Fitter fresher, Electrician fresher, Welder fresher, MLT. Pathology fresher, MLT. Radiology fresher தொழில் பழகுநர் பயிற்சிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த நெய்வேலி NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி இந்த தொழில் பயிற்சிக்கு மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2019 காலை 10 மணி முதல் 07.08.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையத்தளத்திற்குள் சென்று ON LINE REGISTRATION FORM- ஐ பூர்த்தி செய்து விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பயிற்சி மற்றும் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 

பணி: Fitter fresher - 20
பணி: Electrician fresher - 20
பயிற்சியின் கால அளவு: 2 ஆண்டு

பணி: Electrician fresher - 20
பயிற்சியின் காலம்: 15 மாதம்
உதவித்தொகை: முதலாம் ஆண்டும் மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

பணி: MLT. Pathology fresher - 15
பணி: MLT. Radiology fresher - 10
பயிற்சியின் காலம்: 15 மாதம் 
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, மூன்று மாதங்கள் ரூ.10,019 வழங்கப்படும்.

தகுதி: 

அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 14 வயது பூர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களது கையொப்பம் இட்டு, அதனுடன் தேவையான சான்றிதழ்கள், அதாவது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவற்றின் நகலையும் இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை 12.08.2019 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்ற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பொதுமேலாளர், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 
வட்டம்-20, 
நெய்வேலி-607803.

மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை பற்றிய விவரங்களுக்கு, NLC அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.com  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பயிற்சிக்கு தேர்வுசெய்யப்பட்டவ்ரகள் பட்டியில் www.nlcindia.com இணையதளத்தில் 22.08.2019 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பப் படிவம்