Saturday, July 27, 2019

மத்திய அரசில் காத்திருக்கும் 9 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள்..விண்ணப்பிக்கலாம் வாங்க!

தொடர்புடைய படம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பீகார் தொழில்நுட்ப சேவை ஆணையத்தில் செவிலியர் மற்றும் டியூட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நர்ஸ் பணிக்கு 9130 பேரும் ட்யூட்டர் பணிக்கு 169 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 9299 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஜி.என்.எம். எனப்படும் பேறுகால மருத்துவத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்பை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

டியூட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். ஆண்களுக்கு அதிகபட்சமாக 37 வயது வரை இருக்கலாம். பெண்கள் அதிகபட்சமாக 40 வயது ஆகியிருக்கலாம்.

எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப்பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.200.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : ஆகஸ்ட் 26, 2019

 ஆன்லைனில் விண்ணப்பிக்க

No comments:

Post a Comment