Tuesday, July 30, 2019

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர சி-டெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
அதன்படி நிகழாண்டுக்கான சி-டெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 8- ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 21 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். 

நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள்.  இந்தத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26-ஆம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. 

இந்நிலையில், நடந்து முடிந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையத்தில் பார்க்கலாம். இதேபோன்று தேர்வர்கள் தங்கள் சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில், டிஜிலாக்கர் அக்கவுண்டில் பெற்றுக்கொள்ளலாம். இந்த சி-டெட் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment